புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   326
Zoom In NormalZoom Out

கொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. 

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவனை    அவர்    பாடியது.   (பாண்டியன்    நெடுஞ்செழியனைக்
குடபுலவியனார் பாடியது)

(இ - ள்.) ஒலிக்குங்  கடலாற்  சூழப்பட்ட  அணுச்செறிந்த  அகன்ற
உலகத்துக்கண்   தமிழப்படை   கைகலந்த  தலையாலங்கானத்துக்கண்
நிலைபெற்ற உயிரதுபன்மையையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினது
ஒருமையையும்  நின்னுடனே சீர்தூக்கிக்காட்டிய வென்றிவேலையுடைய
செழிய!    பெரும்புலியைப்   படுக்கும்   வேட்டுவன்   எந்திரமறிந்து
கொளுத்திய   பெரிய   கல்லையுடைய   அடாரையும்  போலுமென்று
விரும்பிப்  புல்லினேனல்லனோயான்?  கலங்கி மலைக்கண்ணே தங்கிய
குருவியினம்போல     அம்புசென்று     தைத்த     பொறுத்தற்கரிய
புண்ணையுடைய யானையினது துளையையுடைய பெருங்கை வாயுடனே
துணிந்து   வீழ்ந்து    கலப்பையையொப்ப நிலத்தின்  மேலே  புரள
வெட்டிப்    போர்க்களத்தின்  கண்ணே   வீழ்த்த   ஏந்திய   வாள்
வெற்றியையுடையோராய்    எந்தலைவனோடுகிடந்தார்,    எம்முடைய
புல்லிய   தலையையுடைய   மைந்தர்;  இப்பெற்றிப்பட்ட  வென்றியும்
உளவோ  நமக்கென்று  சொல்லி  முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர்
இன்புற்று  உவகையால்  அழ,  அதுகண்டு  நாணிக்  கூற்றம் இரங்கிய
அஞ்சத்தக்க     போர்க்களத்தின்கண்ணே     இருபெருவேந்தரும்
ஐம்பெருவேளிருமாகிய

எழுவரது  நல்ல   வலியை  வென்றோய்!  நினது  கழுவி  விளங்கின
முத்தாரம் அகத்திட்ட மார்பை. - எ - று.

தமிழ்தலைமயங்கியவென்புழி, தலை, அசைநிலை; இடமுமாம்.

செழிய!   கடந்தோய்!   நின்மார்பை   யான்   விரும்பி  முயங்கினே
னல்லனோவெனக் கூட்டுக.

பெருங்கல்லடாருமென்ற  உம்மை,  எமக்கு  விருப்பஞ் செய்தலேயன்றி
நின்பகைவர்க்கு   வருத்தஞ்   செய்தலான்,   நின்மார்பு  கல்லடாரும்
போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம்.

மூதிற்பெண்