உண்ணினல்லது பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை; அம்பு தங்குங் காவலையுடைய அரணுடனே அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும் அவற்றால் நடுக்கமுறுதல் அறியாத சேமமாகிய காவலை யுடையை; அத்தன்மையை யுடையை யாதலான், உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம், தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சும் - எ - று. |
|
அறிவும் ஈரமும் கண்ணோட்டமுமென்பன சினைவினைப்பாற்பட்டு அளத்தற்கரியை யென்னும் முதல்வினை கொண்டன. |
|
(21) | புலவரை யிறந்த புகழ்சா றோன்றல் |
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி |
வான்றோய் வன்ன புரிசை விசும்பின் |
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் |
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை |
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில் |
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய |
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென |
வேங்கை மார்ப னிரங்க வைகலும் |
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் |
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே |
|
 |