பரந்துகிடக்கின்ற அகன்ற பாசறையிடத்துக் காவலாள! மாற்றரசர் பணிந்துதந்த திறையால் தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும் உயர்ந்த கொல்லிமலையோருடைய அடுபொருந! யானையினது நோக்குப்போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே! வாழ்க, பெருமானே! நினது எல்லையில்லாத செல்வம்; நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நாப் பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமற் பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எங்கோவே! மாந்தரஞ்சேரலிரும்பொறை பாதுகாத்த நாடு தேவருலகத்தையொக்குமென்று பிறர் சொல்லக் கேட்டு வந்து கட்கினிதாகக் கண்டேன்; பெருமானே! முயற்சி வெறுப்பில்லையாய் வேற்றுநாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே சோறுண்டாக நடப் |