புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   329
Zoom In NormalZoom Out

குதற்குக்  காரணமாகிய  நினது   வலியுடனே   புகழை   வாழ்த்திக்
காண்பேனாக  வந்தேன்; பெரும! திரண்ட முகிலெனக் கருதி மயங்கும்
பல  பரிசைப் படையினையும், மலையென்று கருதித் தேனினந் தங்கும்
பெரிய பல யானையினையும், மாறுபடுவோர் அஞ்சும்படி பெருத்தலாற்
கடலெனக்  கருதி  மேகம்  நீர்முகக்க மேற்கொள்ளும் படையினையும்,
அமையாது    நஞ்சுகரக்கும்    பல்லினையுடையவாகிய    பாம்பினது
தலைநடுங்கும்பரிசு   இடியென்று   கருத   முழங்கும்  முரசினையும்,
எல்லார்க்கும்  எப்பொருளும்  வரையாது  கொடுக்கும் வண்மையையும்
உடைய குடநாட்டார் வேந்தே! - எ - று.

காவல!  (8)  பொருந!  (13) பெரும! (33) கோவே! (40) ஏத்திக் காண்கு
வந்தேனெனக் (32-3) கூட்டி வினைமுடிவு செய்க.

குன்று  (3)  என்றது   சிறுமலைகள்;   அன்றி,    மணற்குன்றென்று
நெய்தல்நிலமாக்கி  ஏனை  மூன்றொடுங் கூட்டி, நானிலத்தோருமென்று
உரைப்பாருமுளர்.

அடுபொருந (13) என்றது, வேந்தற்கு வெளிப்படையாய் நின்றது.

தளர்ச்சி (21) என்பதன்பின் நீங்கவென ஒருசொல் தந்தது.

‘அருமுன்பிற்....பிறிது  சென்று’  (20-22)  என்பதற்கு   முன்போலவே
தளர்ச்சி  பிறிதாகப்  பலருவப்பச்  சென்றெனினும் அமையும்;  அன்றி
முன்பின் தளர்ச்சி பிறிதாகச் சென்றென்று உரைப்பாருமுளர்.

ஆனாது முழங்கும் முரசென்க.

(18) முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோ