பயன்படாது; ஆதலால், கொல்லும் போரையுடைய செழிய! இதனைக் கடைப்பிடித்து விரைந்து நிலங்குழிந்தவிடத்தே நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவார்; அந்நீரைத் தளையாதவர்; இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர் - எ - று. இதனால், நீயும் நீர்நிலைபெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக் கொள்க. மற்றும் (16) , அம்மவும் (29) அசைநிலை. உணவின்பிண்டம் உண்டி முதற்றாதலான், உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் (19 - 20) என மாறிக்கூட்டுக. தள்ளாதோர் இவட்டள்ளாதோராதலால் செழிய! இதனை இகழாது வல்லே செய்யென ஒருசொல் வருவித்துரைப்பாரும் உளர். தட்டோர் என்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோரெனினும் அமையும். நீரும் நிலனும் புணரியோர் உடம்பும் உயிரும் படைத்தோரெனவே செல்லுமுலகத்துச் செல்வமும், வித்திவானோக்கும் புன்புலம் இறைவன்றாட்கு உதவாதெனவே நீர்நிலைபெருகத்தட்டலால் வானோக்கவேண்டாத நன்புலம் இறைவன்றாட்கு உதவி ஞாலங்காவலர் தோள்வலிமுருக்குதலும், நிலனெளிமருங்கின் நீர்நிலைபெருகத் தட்டோர் இவட்டட்டோ ரெனவே நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன. நீர்நிலைபெருகத்தட்கவே அறன்முதன்மூன்றும் பயக்குமென்பது கூறினமையான், இது முதுமொழிக்காஞ்சியாயிற்று. (19)
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினே னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முள
|