டிர் கசிதலால் நாணியெனவும் அழுதலாற் கண்ணோடிய எனவும் நிரனிறையாகக் கொள்க. போர்முடிதலாற் போயின கூற்றை நாணியும் கண்ணோடியும் போயிற்றுப்போலக் கூறியது, ஓரணி (தற்குறிப்பேற்றம்) கருதிநின்றது. இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப்படுத்தல் மறத்திற்கிழி பென்று பெண்டிர் இரங்கியழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோ டியதென்று உரைப்பாருமுளர். (20)
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங் கவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும் சோறுபடுக்குந் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைக் குறுங்கோழியூர்கிழார் பாடியது. (இ - ள்.) பெரிய கடலினது ஆழமும், அகன்ற உலகத்துப் பரப்பும், காற்றியங்கும் திசையும், வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப்படும் அவற்றை வரையறுத்தறியினும் வரையறுத்தற்கு அரியை, அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; ஆகலால். சோற்றை ஆக்கும் நெருப்புடனே செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மையறியார், நின்குடை நிழற்கண் வாழ்வோர்; இந்திரவில் அல்லது பகைவரது கொலைவில்லை அறியார்; கலப்பை அல்லது வேறுபடைக்கலமும் அறியார்; போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய அம்மாற்றாருடைய 1மண்ணைக்கொண்டு உண்ணுந் தலைவ! நின்னுடைய நாட்டின்கண் வேட்கைநோயுற்ற பெண்டிர் விரும்பி
|