புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   332
Zoom In NormalZoom Out

நின்வேல் பூக்கவெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

குழைத்தவென்பது குழைந்தவென மெலிந்து நின்றது.

தூங்குகையா னோங்குநடைய
உறழ்மணியா னுயர்மருப்பின
பிறைநுதலாற் செறனோக்கின
பாவடியாற் பணையெருத்தின
தேன் சிதைந்த வரைபோல
மிஞிறார்க்குங் கமழ்கடாத்
தயறுசோரு மிருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
பாஅனின்று கதிர்சோரும்
வானுறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநிழலான்
வாண்மருங்கிலோர் காப்புறங்க
அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா வுலக்கையாற்
கலிச்சும்மை வியலாங்கட்
பொலந்தோட்டுப் பைந்தும்பை
மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்பார்த்தும்
ஓங்குகொல்லியோ ரடுபொருந
வேழநோக்கின் விறல்வெஞ்சேஎய்
வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே
நிற்பாடிய வலங்குசெந்நாப்
பிற்பிறரிசை நுவலாமை
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ
மாந்தரஞ் சேரலிரும்பொறை யோம்பிய நாடே
புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந்
தினிது கண்டிசிற் பெரும முனிவிலை

வேறுபுலத் திறுக்குந் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே. 

திணையும் துறையும் அவை; துறை - இயன்மொழியுமாம். (வாகை)

சேரமான்     யானைக்கட்சேஎய்     மாந்தரஞ்சேரலிரும்பொறையைக்
குறுங்கோழியூர்கிழார் பாடியது.

(இ - ள்.)  அசைந்த  பெருங்கையுடனே   தலையெடுத்து   நடக்கும்
உயர்ந்த  நடையையுடையனவும் அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்றுமாறு
பட்டொலிக்கும்  மணியுடனே   உயர்ந்த    கோட்டினையுடையனவும்
பிறை   வடிவாக   இடப்பட்ட மத்தகத்துடனே    சினம்பொருந்திய
பார்வையையுடையனவும் பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடைய