பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே. திணையும் துறையும் அவை; துறை - நல்லிசைவஞ்சியுமாம். (வாகை) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது. (இ - ள்.) வெண்மையில்லாத வலிய வயிரக்கம்பத்தையுடைய கூடத்தில் நிற்றலை வெறுத்துச்சென்று யானை படிந்து நீருண்டதாகக் கலக்கமுற்ற துறையையும் கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய சூரபன்மாவைக்கொன்ற முருகனது கூளிச்சுற்றத்தை யொக்கும் நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர் தம்மாற் கொள்ளலாவதனை முகந்துகொண்டு கொள்ளாத ஒழிபொருளை மாற்றார் முகந்து கொள்ளப்படும் உணவாக்காமற் சிதறிய நிலங்களையும் வடித்தல்பயின்ற கோடாலி வெட்டுதலான் ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும் நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்லமனைகளிடத்து விரும்பும் அடுதீயைக்கெடுக்க மிக்க தீ முழங்கிய பக்கத்தையும் பார்த்துப் பகைவர் நாண நாடோறும் அவரிடத்துச் சென்று இன்னமும் இத்தன்மையன பலவுஞ் செய்குவன், யாவரும் தன்னை அணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினையுடையோனெனக் கருதி உலகம் பொறையாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய தலையாலங்கானத்தின்கட் போரை எதிர்நின்று கொன்ற காலன்போலும் வலியையுடையோய்! நின்னைக் கண்டேனாய் வந்தேன்; அற்ற கோட்டையுடைய பெரிய கலை புலியின்கண்ணே அகப்பட்டதாகச் சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை பூளையோங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து வேளையினது வெளிய பூவைத்தின்னும் ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியே-எ-று. காலமுன்ப! துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி இன்னும் இன்னபல செய்குவன் துணிவினோனென உட்கொண்டு காட்டின் |