கது |
வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை |
மலர்தலை யுலகத்துத் தோன்றிப் |
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. |
|
திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி. |
|
அவனை மாங்குடிகிழார் பாடியது. |
|
(இ - ள்.) நெல்லையரியும் பெரிய உழவர் செஞ்ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின் தெளிந்த கடற்றிரையின்மேலே பாயும் திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர் வெம்மையையுடைய மதுவையுண்டு மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்ற தாளத்தையாடும் கடற்றுவலையாலே தழைத்த தேன்பரந்த புன்னையினது மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர் விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கைகொடுக்கும் வண்டுமொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்துக் கடன்முள்ளிப்பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனியசாறும் உயர்ந்தமணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும் பரிக்கவொண்ணாத பலமக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர்கள் பொருந்திய பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது நீர்வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே வயலிடத்துக் கயலைமேயும் நாரை போரின்கண்ணே உறங்கும் பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட வெற்றிபொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியாற்பொலிந்த தேரினையும் உடைய செழிய! நின்றுநிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது பட்டுப் போவதாக நின்பகைவருடைய நாளாகிய மீன்; நின்னொடு பழைதாய் முதிர்ந்த உயிரினும் உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற நினது வெற்றிக்குடியோடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வார் நினது முயற்சிவலியை வாழ்த்த இரக்கும் பரிசிலர் நின்வண்மை |
|
|
 |