நிறத்தை உடைத்தாகிய நூறாகிய இதழையுடைய மலரினது நிரையைக் கண்டாற் போன்ற ஏற்றத் தாழ்வில்லாத, சிறந்த குடியின்கட்பிறந்து வீற்றிருந்த வேந்தரை எண்ணுங்காலத்துப் புகழும் பாட்டும் உடையோர் சிலர்; தாமரையினது இலையையொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவராற் பாடப்படும் புகழையுடையோர் ஆகாயத்தின்கண் பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார்அறிவுடையோர், தாம் செய்யும் நல்வினையைமுடித்தென்று சொல்லக் கேட்பேன்; என்னுடைய இறைவ! சேட்சென்னி! நலங்கிள்ளி! வளர்ந்ததொன்று பின் குறைதலுண்டாதலும், குறைந்ததொன்று பின் வளர்தலுண்டாதலும், பிறந்ததொன்று பின் இறத்தலுண்டாதலும், இறந்ததொன்று பின் பிறத்தலுண்டாதலும் கல்விமுகத்தான் அறியாத மடவோரையும் அறியக்காட்டித் திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற தேயத்தின்கண் ஒன்றை மாட்டாராயினும் வல்லாராயினும் வறுமையான் வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து அவர்க்கருளி வழங்கவல்லையாகுக; அருளிலராய்க் கொடாமையை வல்லராகுக, கெடாத வலியையுடைய நினக்குப் பகையாய் மாறுபட்டோர் - எ - று. நூற்றிதழலரின் நிரைகண்டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலரென இயையும். நிரைகண்டன்ன விழுத்திணையென்றுரைப்பினும் அமையும். அருளிலர் கொடாமைவல்லராகுக என்றதனாற் பயன், அவையுடை யோர் தத்தம் பகைவரை வெல்வராதலால், பகையெதிர்ந்தோர் அவை இலராக வென்பதாம். செய்வினைமுடித்து வானவூர்தி எய்துபவென இயையும். (28)
சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும் மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம் பேதைமை யல்ல தூதிய மில்லென முன்னு மறிந்தோர் கூறின ரின்னும் அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
கானத் தே
|