யுரைப்பினும் அமையும். இஃது அறஞ்செய்யாதானை அறஞ்செய்கவெனக் கூறியவாறு. அதன்திறமென்பதற்கு அப்பேதைமையென்றாக்கி, அஃது உண்டானால் வரும் பொல்லாங்கும், அதுபோனால் வரும் நன்மையுமென்றுரைப்பாரும் உளர். (29)
அழல்புரிந்த வடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலநறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப் பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை பாண்முற்றொழிந்த பின்றை மகளிர் தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம், ஆங்க முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக் கொடியோர்த்தெறுதலுஞ் செவ்வியோர்க்களித்தலும் ஒடியா முறையின் மடிவிலை யாகி நல்லத னலனுந் தீயதன் றீமையும் இல்லை யென்போர்க் கினனா கிலியர் நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர் ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின் இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள் பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக் கூவை துற்ற நாற்காற் பந்தர்ச் சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க் குதவி யாற்று நண்பிற் பண்புடை ஊழிற் றாகநின் செய்கை விழவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய நகைப்புற னாகநின் சுற்றம் இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுமொழிக்காஞ்சி) அவனை அவர் பாடியது. (சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது) (இ - ள்.) எரியால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப்பூவுடனே ஐதாகத் தட்டிக் கம்பியாகச்செய்த நூலின்கண்ணேயிட்டு அலங்கரித்த தொழிலாற் பொலிந்த பொன்னானியன்ற நல்லமாலையைப் பாறிய மயிரையுடைய கரியதலை பொலிவுபெறச் சூடிப் பாண்சுற்றம் சூழ்வதாக, நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண்சுற்றம் சூழலொழிந்த பின்னர் நினது உரிமைமகளிருடைய தோள் சூழ்வதாக, நின் சாந்து புலர்ந்த மார்பம்; எப்போதும் வெறுப்பில்லாத அலங்காரத்தையுடைய கோயின் முற்றத்தின்கண்ணேஇ
|