புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   339
Zoom In NormalZoom Out

கண்ணே நின்னைக்  கண்டு  அக்காட்டுவழியே வந்தேனெனக் கூட்டி
வினை முடிவுசெய்க.

வருவலென்பது, ஈண்டு இறந்தகாலப்பொருட்டாய் நின்றது.

இவனைக்   காணாமுன்னே  கண்டு  வந்தேனென்றான்,  இவன்செய்த
வென்றியெல்லாம் கண்டமையின்.

பாசிலைத்தெரியல் முருகனென இயையும்.

நவியம்பாய்தலென்பது, கருவி கருத்தாவாய் நின்றது.

கலை  புலிப்பாற்பட்டெனச்  சிறுமறி  தழீஇய  மடப்பிணை பறந்தலை
வேளைவெண்பூக்கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி

அவர்     பெண்டிர்   தம்   இளம்புதல்வரை    ஓம்புதற்பொருட்டு
இறந்துபடாது    அடகு    தின்று    உயிர்   வாழ்கின்றாரென்பதோர்
பொருள்தோன்ற நின்றது.

இனித்   துணிவினோனென்று    பிறர்சொல்லவெனவும்,  கண்டனென்
வருவலென்பதனைக்       காலமயக்கமாக்கிக்        கலங்கியதுறை
முதலாயினவற்றை  நோக்கி  இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண்
மேற்செல்வனென     நினைந்து       காட்டிடத்தே     நின்னைக்
காணியவந்தேனெனவும் உரைப்பாரும் உளர்.

(24) நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையிற்
றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும்
பூங்கரும்பின் றீஞ்சாறும்
ஓங்குமணற் குவவுத்தாழைத்
தீநீரோ டுடன்விராஅய்
முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா வீகை மாவே ளெவ்வி
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்விற் சேக்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது
படாஅச் செலீயர்நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்னநின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்க ளீகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்

தாங்கினி தொழுகுமதி பெரும வாங்