யைச் சொல்ல ஒள்ளிய வளையையுடைய மகளிர் பொற்கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனையுண்டு மகிழ்ச்சிமிக்கு அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும! அவ்வொழுக்கம்வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; பழைய புகழ்தான், பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே பிறந்து பரக்க ஒழுகாது நின்று மாய்ந்தோர் பலர்; அவர் வாழ்ந்தோரெனப்படாராதலான், எ-று. மேல் எண்ணப்பட்ட பெயரெச்சமூன்றும் மிழலையென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன. முந்நீர்ப்பாயும் நல்லூரென்க. உயிரினும் சிறந்த, ஆக்கையன்ன வாளின்வாழ்நரெனக் கூட்டி உயிர்க்கு யாக்கை போலவும் யாக்கைக்கு உயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நரென்க. நின்குடியொடுமூத்த நின்யாக்கையன்ன விழுத்திணைக்கண் உளராய் நின்னுயிரினுஞ்சிறந்த வாளின்வாழ்நரெனக் கூட்டினும் அமையும். செழிய! நின் நாண்மீன் நின்றுநிலைஇயர்; நின்பகைவர் மீன் படாஅச்செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசைசெலச் செல்லாது விளிந்தோர் பலர்; அவர் வாழ்ந்தோரெனப்படார்; ஆதலால், பெரும! வாழ்த்த நுவல மடுப்ப மகிழ்சிறந்து இனிது ஒழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோரென்பவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. தாங்காவிளையுளென்பதூஉம் பாடம். ஆங்கது : ஒருசொல்; ஆங்கு அசைநிலையுமாம். இனி, தொல்லிசையையுடைய உலகத்துத் தோன்றி மேற்சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க ஒழுகாது நின்று விளிந்தோர் பலரென உரைப்பாரும் உளர். இது, நிலையாமை கூறி, இனிது ஒழுகென்றமையாற் பொருண் மொழிக்காஞ்சி. (25)
மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி பிணியுறு முரசங் கொண்ட காலை நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய முலைபொலி யாக முருப்ப நூறி
|