புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   341
Zoom In NormalZoom Out

வேலையேந்தி   வேந்துபடப் போரைக்  கலக்கிப்  புகழ் பரக்க அவர்
முரசைக்     கொண்டு     முடித்தலையை     அடுப்பாகக்கொண்டு
குருதிப்புனலாகிய              உலையின்கண்           தசையும்
மூளையுமுதலாயினவற்றைப்பெய்து     வீரவளையையுடையதோளாகிய
துடுப்பால்    துழாவி    அடப்பட்ட    உணவால்  அடுகளத்தின்கட்
களவேள்விவேட்ட   கொல்லும்   போரையுடைய  செழிய!  அமைந்த
கேள்வியையும்   ஐம்புலனும்   அடங்கிய   விரதங்களையும்  நான்கு
வேதத்தையுமுடைய  அந்தணர்  சுற்றமாக வேந்தர் அதற்கேற்ப ஏவல்
செய்ய   நிலைபெற்ற   வேள்வியைச்   செய்து   முடித்த   வாய்த்த
வாளினையுடைய  வேந்தே!  தவஞ்செய்தார்,  யாவர்க்குந்  தெளிவாக,
நின்னுடைய  பகைவர்;  நினக்குப்  பகைவரென்னும் பெயரைப் பெற்று
நின்னொடு     போர்செய்தற்கு    மாட்டாராயினும்    அத்துறக்கத்து
வாழ்வோர்-எ-று.

களனகற்றவுமென்னும் உம்மை அசைநிலை.

மன்னியவேள்வியென்றது, களவேள்வியொழிந்த வேள்விகளை.

செழிய!     வேந்தே!     ஆற்றாராயினும்,    ஆண்டுவாழ்வோராகிய
நின்பகைவர் மாற்றாரென்னும் பெயர்பெற்று நோற்றாரெனக் கூட்டுக.
 

(27) சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.
 

திணை-பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி.

சோழன்    நலங்கிள்ளியை   உறையூர்   முதுகண்ணன்   சாத்தனார்
பாடியது.

(இ - ள்.)சேற்றின்கண்ணே வளரும் தாமரைபூத்த ஒள்ளிய