புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   342
Zoom In NormalZoom Out

ார்நின் றெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே
அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே.
 

திணையும்  துறையும்  அவை.  (பொதுவியல்,  முதுமொழிக்  காஞ்சி)
அவனை   அவர்   பாடியது.   (சோழன்  நலங்கிள்ளியை  உறையூர்
முதுகண்ணன் சாத்தனார் பாடியது).

(இ    - ள்.)மக்கட்பிறப்பிற்   சிறப்பில்லாத  குருடும்,  வடிவில்லாத
தசைத்திரளும்,  கூனும், குறளும், ஊமும்,  செவிடும்,  மாவும், மருளும்,
உளப்பட   உலகத்து   உயிர்வாழ்வார்க்கு   எட்டுவகைப்பட்டபெரிய
எச்சமென்று சொல்லப்பட்ட இவையெல்லாம் பேதைத்தன்மையையுடைய
பிறப்பாவதல்லது இவற்றாற் பயனில்லையென முற்காலத்தும் அறிந்தோர்
சொன்னார்; இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை  யான்  சொல்ல
வந்தது,   வட்டமாகிய  வரியையுடைத்தாகிய    செம்பொறியையுடைய
காட்டுக்கோழிச்சேவல் தினைப்புனம் காப்போரைத் துயிலுணர்த்துவதாகக்
கூவும்  காட்டின்கண்  உள்ளோர்,   நின்னுடைய    பகைவர்;  நீதான்
வேலிப்புறத்து  நின்று  வேண்டிய    மாக்கட்கு   அறத்தைக்   கருதி,
அகத்துள்ளோர்தாம்  பிடுங்கியெறியும்    கரும்பாகிய   போகடப்பட்ட
கழை  வாவியகத்துத் தாமரையினது பொலிந்த பூச்   சிதற  வீழ்ந்ததாக,
அது  கூத்தர் ஆடுகளத்தையொக்கும்  உள்ளாகிய   நாட்டையுடையை;
ஆதலான்,  அறனும்  பொருளும்  இன்பமும்  என்னப்பட்ட  மூன்றும்
செய்வதற்  குதவும்   பெரும!   நினது   செல்வம்   உதவாதொழிதல்
நின்னைப் பாதுகாவாமை-எ - று.

பிண்டமென்பது,     மணைபோலப் பிறக்குமது, மாவென்பது, விலங்கு
வடிவாகப் பிறக்குமது.மருளென்பது, அறிவின்றியே மயங்கியிருக்குமது.

ஊதியமென்பது,  அறம்பொருளின்பங்களை;  அன்றி  அறமென்பாரும்
உளர்.

நிற்போற்றாமையென்ற   கருத்து, சிதடுமுதல் அறிவின்மை பிறப்பொடு
கூடாதவாறு போல நின்செல்வமும் அறமுதலியன செய்தற்கேற்றிருப்பச்
செய்யாமையாகிய   அறிவின்மை,   மக்கள்   யாக்கையிற்   பிறந்தும்
பயனில்பிறப்பாகப்   பண்ணுதலால்  நினக்கு  வரும்  பொல்லாங்கைப்
போற்றாமையென்பதாம்.

கானத்தோர்    நின்பகைவரென்றவதனாற்    பகையின்மை   தோற்றி
நின்றது.

மாவும்  மருளும்  உளப்படச் சிதடுமுதலாகப் பிறப்பொடுகூட்டப்படாத
பெரிய எச்சமெனப்பட்ட எட்டுமெனக் கூட்டி