னிதாக முரசு ஒலிப்பத் தீயோரைத் தண்டஞ் செய்தலும் நடுவுநிலைமையுடையோர்க்கு அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையாற் சோம்புதலையுடையையல்லையாகி நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகாதொழிவாயாக; நெல்விளைந்த வயலிடத்துளதாகிய புள்ளை ஓட்டுவார் வீழ்ந்த பனங்கருக்காகின்ற விறகாற் கழிக்கண் மீனைச் சுட்டு அதனுடனே வெய்ய மதுவை உண்டு தொலைத்தும் அமையாராய்த் தெங்கினது இளநீரை உதிர்க்கும் செல்வமிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும் நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர் நின்னுடைய பகைவரைப்போல இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு கூவையிலையால் வேயப்பட்ட நான்குகாலையுடைய பந்தராகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி நின்பால் வருவார்க்கு உதவிசெய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய முறைமை யுடைத்தாக, நினது தொழில்; விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம்போல அடைவடைவே தோன்றி இயங்கி இறந்துபோகின்ற இவ்வுலகத்தின்கண் பொருந்திய மகிழ்ச்சியிடத்ததாக, நின்னுடைய கிளை; புகழிடத்ததாக, நீ பாதுகாத்த பொருள்-எ - று. நின் நாண்மகிழிருக்கை பாண்முற்றுக; அதன்பின் அகலம் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகாதொழிவாயாக; நின் பற்றாமாக்களைப் போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையின் நீங்கி இப்பொழுது நன்னாடு பெற்று உவக்கும் நின் படைகொண்மாக்கள் வருநர்க்கு உதவியாற்றும் நண்போடுகூடிய பண்புடைத்தாகிய முறைமையையுடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருளெனக் கூட்டுக. ஒரீஇ (20) என்பதனை ஒருவவெனத் திரிப்பினும் அமையும். நறுமை பொன்னிற்கு இன்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம். ஆங்க : அசை. நசைப்புறனாகவென்று உரைப்பாரும் உளர். இதனாற் சொல்லியது : படைகொள்மாக்களும் முறைமுதலாயின தப்பாமற் செய்து இன்புற்றிருக்கும்படி சிறப்புச் செய்யவேண்டுமென்பதாயிற்று.
(30)
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தார் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
|