களிறுகவு ளடுத்த வெறிகற் போல ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்ஃறாரத்த நாடுகிழவோயே. திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. அவனை அவர்
பாடியது. (சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடியது) (இ - ள்.)செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியையுடையோருமுளர்; அப்பெரியோர் அச்செலவுமுதலாயின அறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தை யுடையையாகி யானைதன் கதுப்பின்கண் அடக்கிய எறியுங் கல்லைப்போல மறைத்த வலியையுடையையாதலான், நின்னை விளங்க எப்பரிசு பாடுவர் புலவர்? கூம்புடனே மேற்பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேற்பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும் அளவருமுதலாகிய தகுதியில்லாதோர் தம்புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்ணே சொரியும் கடலால் வரும் பலபண்டத்தையுடைய நாட்டையுடையோய்! - எ - று. செலவென்றது செல்லப்படும் வீதியை. பரிப்பென்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை. பாய் களையாது பரந்தோண்டாதென்பதனால், துறைநன்மைகூறிய வாறாம். பெருங்கலத்தினின்றென ஐந்தாவதாக உரைப்பினும் அமையும். துப்பினையாதலிற் புலவர் யாங்கனம் பாடுவரெனக் கூட்டுக.
(31)
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை
உருகெழும
|