புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   346
Zoom In NormalZoom Out

விடத்து எடுத்துக்கொண்ட விழவினும் பல - எ-று.

நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை.

அல்லிப்பாவை யாடுவனப்பென்றது ஆண்கோலமும் பெண்கோலமுமாய
அவ்விருவருமாடுங்   கூத்தை.   படையோர்     பாசறை    பொலிய
வென்பதற்குப்    படையோரது     பாசறை     பொலிவுபெறவென்று
உரைப்பினும் அமையும்.

பாசிலை மலைய என்று பாடமோதுவாரும் உளர்.

தனிமகன்வழங்காவென்றது,     தனித்து    வழங்கின்    அப்பொழில்
வருத்துமென்பது.

களத்துக்கொள்   வெண்ணெலென்பது,  களக்கொள்  வெண்ணெலெனத்
தொக்கது.

முகந்தனர்     கொடுப்ப,     உகந்தனர்     பெயருமென்பன
வினையெச்சமுற்று.

உழுவைபொறிக்குமாற்றலையாகலின்,     பாண்கடும்பருத்தும் நின்
வெம்முனையிருக்கை  நீ  கொண்ட  விழவினும்  பல  செம்மற்றெனக்
கூட்டுக.

விழவென்பது    சிறுசோற்றுவிழவினை;    வேள்வியென்றுரைப்பினும்
அமையும். 

(34) ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

திணை   -  பாடாண்டிணை;   துறை   -   இயன்மொழி.   சோழன்
குளமுற்றத்துத்துஞ்சிய   கிள்ளிவளவனை  ஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) ஆனினது முலையாற் பெறும்பயனைக் கெடுத்த