பாற் பெற்ற உணவாகவும் கொள்க; அன்றிச் சென்ற இடந்தோறும் பெற்ற உணவாகவுரைப்பினும் அமையும். மன்றத்துச் சூடு கிழித்த ஒக்கலொடுகூட வேண்டுமொழிபயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர்போலக் கூறினார். ஆயிழைகணவ! செய்திகொன்றோர்க்கு உய்தியில்லென அறம்பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வமுழுவதுஞ்செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலையந்தியும் மாலையந்தியும் நின் தாள்பாடேனாயின், பல்கதிர்ச்செல்வன் படுபறியான்; பெரும! யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண்டுளியினும் பலகாலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக. கோவதை முதலாயின வாக்காற்சொல்லவும்படாமையின், ஆன்முலை யறுத்தவெனவும், மகளிர்கருச்சிதைத்தவெனவும், பார்ப்பார்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது, பரிசில்பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ என்றாற்கு இவ்வாறு செய்த நின்னை வளவன்வாழ்க வென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல்கதிர்ச் செல்வன் படுதலறியான், அதனால் இம்மையின்பம் பெறேனெனவும், செய்ந்நன்றிகொன்றோர்க்கு உய்தியில்லையெனவே மறுமையின்கண் நரகம்புகுவேனெனவும் கூறியதாகக் கொள்க.
(35)
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும
அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்
டுறை
|