புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   348
Zoom In NormalZoom Out

யையுடைய   நீதியைக்  கேட்கவேண்டுங்காலத்துச்  செவ்வியெளியோர்
இவ்விடத்துத்   துளிவேண்டுங்காலத்து  மழைபெற்றவரே;  ஞாயிற்றைத்
தன்மேற்கொண்ட    பக்கந்திரண்ட    முகில்   மாகமாகிய   உயர்ந்த
வானத்தினது   நடுவுநின்று   அதன்   வெயிலை   மறைத்தாற்போலக்
கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற நினது வானைமுட்டிய பரந்த
வெண்கொற்றக்குடை   வெயிலைமறைத்தற்குக்   கொண்டதோவெனின்,
அன்று;    வருத்தமுற்ற    குடியை    நிழற்செய்தல்    காரணத்தாற்
கொள்ளப்பட்டது;  கூரிய வேலினையுடைய வளவ! இளையபனையினது
துண்டம்   போல  வேறுவேறு  கிடப்பக்  களிற்றுத்திரளைப்  பொருத
இடமகன்ற   போர்க்களத்தின்கண்  வருகின்ற  படையை  எதிர்நின்று
பொறுத்து  அது  சரிந்துமீளும் புறக்கொடைகண்டு ஆர்த்துக் கொண்டு
நின்போர்   செய்யும்   படை  தரும்வெற்றியும்  உழுகின்ற  கலப்பை
நிலத்தின்கண்ணே   ஊன்று  சாலிடத்து  விளைந்த  நெல்லினதுபயன்;
மழை பெய்யுங்காலத்துப் பெய்யா தொழியினும், விளைவு குறையினும்,

 

இயல்பல்லாதன     மக்களது தொழிலிலே  தோன்றினும்   காவலரைப்
பழித்துரைக்கும்,    இவ்விடமகன்ற    உலகம்;    அதனை   நன்றாக
அறிந்தனையாயின்,     நீயும்    குறளைகூறுவாரது    உறுதியில்லாத
வார்த்தையை  உட்கொள்ளாது  ஏரைப்  பாதுகாப்பாருடைய குடியைப்
பாதுகாத்து  அக்காவலாலே  ஏனைக்  குடிகளையும் பாதுகாப்பாயாயின்
நின் அடியைப் போற்றுவர், நின் பகைவர் - எ - று.

 

வளியிடை     வழங்கா மண்டிணி  கிடக்கையென  இயையும்; அன்றி,
வாயுபதத்துக்கு   மேலான  வானமெனக்  கிடந்தவாறே  உரைப்பினும்
அமையும்.

 

அரசென்றது அரசர்தன்மையை.
 

முறைவேண்டுபொழுதிற்     பதனெளியோர்   ஈண்டு   உறைவேண்டு
பொழுதிற்  பெயல்பெற்றோரென்ற  கருத்து:  நீயும் பதனெளியையாதல்
வேண்டும்.  அவ்வாறு  பெயல்பெறுதற்கென்றவாறாம்;  அன்றி, இதற்கு
முறைவேண்டுபொழுதிற்