தியி னிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி யொன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வே மல்லே மென்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து
நெஞ்சுநடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. திணை - வாகை; துறை - அரசவாகை; மழபுலவஞ்சியுமாம். அவனைக் கோவூர்கிழார் பாடியது. (இ-ள்,) சிறப்புடைய முறைமையாற் பொருளும் இன்பமும் அறத்தின்பின்னே தோன்றும் காட்சிபோலச் சேரபாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக ஓங்கிய நினது ஒன்றாகிய வெண்கொற்றக்குடை நிறம் பொருந்திய கலைநிறைந்த திங்கள்போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க நல்ல புகழ்வேட்கையை விரும்பி வெல்லும்போரினைச்செய்யும் வீட்டின்கண்ணே யிருத்தலல்லது நின்நகரின்கண் இருத்தல் உடம்படாய் நீ; கோட்டினது நுனைமுகம் தேய மடுத்துப் பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக்கழலையுடைய மறவர், காடு நடுவே கிடந்த நாடு மிகவும் தூரியவாதலால், யாம் போவேமல்லேமென்று கருதார்; ஆதலான், ஓசை உண்டான விழாவினையுடைய அவ்விடத்துப் பகைப்புலத்தின்கண்ணே தங்கிவிட்டுக் கீழ்க்கடல் பின்னதாக மேற்கடலினது வெளிய தலையையுடைய திரை நினது குதிரையினது குளம்பையலைப்ப வலமாக முறையே வருதலுமுண்டாமென்று சுழன்று நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்பத் துயிலாத கண்ணையுடையவாயின, வடநாட்டுள்ள அரசுகள் - எ-று. அவர் பாயவென்பதூஉமாம்.
(32) கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ |