புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   350
Zoom In NormalZoom Out

வல்லோன் றைஇய வரிவனப் புற்ற

அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்

காம விருவ ரல்லதி யாமத்துத்

தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்

ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி

வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப

நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே.
 

திணை - வாகை; துறை - அரச வாகை. அவனை அவர் பாடியது.

 

(இ     - ள்.)காட்டின்கண்ணே தங்கும்  வாழ்க்கையையுடைய சினம்
பொருந்திய  நாயையுடைய வேட்டுவன் மானினது தசையைச் சொரிந்த
கடகமும்  இடைமகள் தயிர்கொண்டுவந்த மிடாவும் நிறைய ஏரானுழுது
உண்டு  வாழ்வாரது  பெரிய மனையின்கண்  மகளிர்  குளத்துக்  கீழ்
விளைந்த     களத்தின்கட்    கொள்ளப்பட்ட     வெண்ணெல்லை
முகந்துகொடுப்ப       உவந்து       மீளும்       தென்றிசைக்கட்
பொதியின்மலையையுடைய  பாண்டியனது நல்ல நாட்டுள்ளும் ஏழாகிய
அரணின்கட்   கதவத்தை  யழித்துக்  கைக்கொண்டு  நினது  பெரிய
வாயையுடைய    புலியைப்    பொறிக்கும்   வலியை;    ஆதலான்,
நின்னைப்பாடும்     புலவர்     நினது   மேற்செலவைப்    பாடப்
படைக்கலத்தினையுடையோர்       தாதாகிய      எருப்பொருந்திய
மறுகினையுடைய  பாசறைக்கண்ணே  பொலிவுபெறப்  புலராத  பசிய
இலையை  இடையிட்டுத் தொடுக்கப்பட்ட மலராத முகையினையுடைய
மாலையினது    பந்தைக்    கண்டாற்போன்ற   தசையோடு   கூடிய
பெருஞ்சோற்றுத்     திரளையைப்     பாண்சுற்றத்தையூட்டும்
தலைமையையுடைத்து,    நினது   வெய்யமுனையாகிய   இருப்பிடம்;
கைவல்லோனாற்  புனைந்துசெய்யப்பட்ட எழுதிய  அழகு பொருந்திய
அல்லிப்பாவை   அல்லியமென்னும்   கூத்தையாடும்  அழகையொப்ப
அன்பினையுடைய   துணைவனும்   துணைவியுமாகிய   இருவரல்லது
இடையாமத்தின்கண்  தனிமகன்  வழங்காத  குளிர்ந்த  மலரையுடைய
காவின்கண்   இயங்குதற்கு  இனிய  செறிந்த  மணலையுடைய  புதிய
பூவையுடைய  சாலையினது  வாயிலின்கண் மாடந்தோறும்  செம்மறிக்
கிடாயைப் படுக்க நீ அவ்