புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   352
Zoom In NormalZoom Out

வேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயி னீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே.

திணை - அது;  துறை -  செவியறிவுறூஉ. (பாடாண்டிணை) அவனை
வெள்ளைக்குடிநாகனார்   பாடிப்  பழஞ்செய்க்கடன்  வீடு கொண்டது.

(இ - ள்.) நீர்செறிந்த    பெரிய    கடல்    எல்லையாகக்  காற்று
ஊடுபோகாத  வானத்தைச்சூடிய  மண்செறிந்த உலகத்தின்கட்குளிர்ந்த
தமிழ்நாட்டிற்கு    உரியராகிய   முரசொலிக்கும்   படையினையுடைய
மூவேந்தருள்ளும் அரசென்றற்குச் சிறப்புடையது, நின்னுடைய  அரசே;
பெரும!    விளங்கிய    சுடரையுடைய    ஞாயிறு  நான்குதிக்கினும்
தோன்றினும்,  விளங்கிய  கதிரையுடைய வெள்ளிமீன்  தென்றிசைக்கட்
செல்லினும்,  அழகிய  குளிர்ந்த காவிரி வந்து பலகாலாயோடி ஊட்டத்
தொகுதிகொண்ட    வேலினது    காட்சியை    யொப்ப   அசைந்த
கண்ணினையுடைய   கரும்பினது  வெளிய  பூ  அசையும்  நாடென்று
சொல்லப்படுவது    நின்னுடைய    நாடே!    அந்நாடு  பொருந்திய
செல்வத்தையுடைய  பெருமைபொருந்திய வேந்தே; நின்னுடையன சில
காரியஞ்சொல்லுவேன்;   என்னுடையன   சிலவார்த்தை  கேட்பாயாக;
அறக்கடவுள்மேவி   ஆராய்ந்தாற்போன்ற   செங்கோலான் ஆராயும்
ஆராய்ச்சி