புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   354
Zoom In NormalZoom Out

சை தன்மனையியம்ப இனிதிருந்த  வேந்தனொடு மலைத்தனையென்பது
நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும்  விடுநையாயினும் நின்
புரைமை  நீ  அளந்தறிதியென  மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.
 

மகளிர்     தெற்றியாடும்   பொருநை   யென்ற  கருத்து:  இங்ஙனம்
இளமகளிர்   கழங்காடும்   அணுமையதாயினும்   புறப்பட்டுப்  போர்
செய்யாத அவன் வலியின்மை தோற்றிநின்றது.
 

தெற்றியாடும் தன்னூரென இயைப்பினும் அமையும்.

மேற்சென்றோனைச்     சந்து     செய்து     மீட்டலின்,     இது
துணைவஞ்சியாயிற்று.

(37) நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த
வேக வெந்திற னாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்
செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே. 

திணை  -  வாகை;  துறை - அரசவாகை; முதல்வஞ்சியுமாம்.அவனை
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

(இ - ள்.)  நஞ்சுடைத்தாகிய வெளிய  பல்லினையுடைய   ஐந்துபடம்
பொருந்திய    தலையைச்சுமந்த    சினம்    பொருந்திய    வெய்ய
திறலையுடைய பாம்பு புக்கதாக வானம் தீப்பிறக்கும்பரிசு முறுகிப் பசிய
கொடியினையுடைய    பெரிய    மலைமுழையின்கண்ணே இடியேறு
எறிந்தாற்போல,  புறவுற்ற துயரத்தைக் கெடுத்த வெள்வேலோடு சினம்
பொருந்திய     படையையுடைய     செம்பியன்     மரபிலுள்ளாய்!
கராம்செருக்கிய   குழிந்த  இடத்தையுடைய  அகழியினையும்,  இடம்
கரிதாகிய ஆழத்தின்கட்    சேரத்    திரண்டோடி   இடையாமத்து
ஊர்காப்பாருடைய விளக்குநிழலைக் கவரும்     கடிய     மாறுபாடு
பொருந்திய முதலையையுடைய    நீர்மிக்க   மடுவினையும்,   செம்பு
பொருவும்  மதிலையும்     உடைய   தலைமைபொருந்திய   பழைய
ஊரினுள்ளே கச்சணிந்த யானையையுடைய அரசுண்டாகலின், அவற்றை
நல்லவென்