புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   356
Zoom In NormalZoom Out

யில்
ஓம்பாது கடந்தட்டவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழறைஇய
வல்லாளனை வயவேந்தே
யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும்
இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே.

திணை - அது; துறை - செவியறிவுறூஉ.  (பாடாண்டிணை)  அவனை
ஆவூர் மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.)  நீ, பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற  அரண்களைப்
பாதுகாவாது  எதிர்நின்று அழித்து அவரைக்கொன்று அவர் மகுடமாகச்
செய்யப்பட்ட  பசும்பொன்னால் நினது அடிபொலிய வீரக்கழல் செய்து
புனைந்த   வலிய   ஆண்மையையுடையை;   வயவேந்தே!  யாங்கள்,
நின்னை   இழித்துரைப்போர்   கழுத்திறைஞ்சப்   புகழ்ந்துரைப்போர்
பொலிவுதோன்ற இன்று கண்டாற்போலக் காண்போம்; எந்நாளும் இனிய
மொழியோடு  எளிய  செவ்வியை  யாகுக; பெரும! ஒரு பிடி கிடக்கும்
சிறிய இடம் ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டையுடையோய்
- எ - று.

நாடுகிழவோய்!    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி;   அதனால், நின்
இகழ்பாடுவோர்  எருத்தமடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற யாம்
இன்று கண்டாங்குக் காண்குவமெனக் கூட்டுக.

வல்லாளனையென்பதனுள்    ஐகாரம்   முன்னிலை   விளக்கிநின்றது;
அசைநிலையுமாம். மதி : முன்னிலையசைச்சொல்.

‘கழறைஇய     வல்லாளன்’ என்றதனாற் பகையின்மையும், ‘ஒருபிடி
படியுஞ்   சீறிட   மெழுகளிறு  புரக்கும்  நாடுகிழவோய்’  என்றதனாற்
பொருட்குறைவின்மையுங் கூறியவாறாயிற்று.

(41) காலனுங் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
கெவ்வங் கரக்கும் பைதன் மாக்