புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   358
Zoom In NormalZoom Out


 

சோழன்     நலங்கிள்ளிதம்பி  மாவளத்தானும்   தாமப்பல்கண்ணனும்
வட்டுப்பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச்
சோழன்மகனல்லையென   நாணியிருந்தானைத்  தாமப்பல்கண்ணனார்
பாடியது. 

(இ - ள்.)நிலத்தின்மேல்      உயிர்வாழ்வார்க்கு      வெம்மையான்
உளதாகிய   சுழற்சி   நீங்கச்  சுடுகின்ற  கதிரையுடைய  ஞாயிற்றினது
வெப்பத்தைத்    தாம்   பொறுத்துக்   காற்றை   உணவாகக்கொண்டு
அச்சுடருடனே  சூழவரும்  விளங்கிய  சடையையுடைய அருந்தவரும்
வியப்பான்  மயங்க,  வளைந்த சிறகினையும் கூரிய உகிரினையுமுடைய
பருந்தினது   எறிதலைக்   கருதி  அதனைத்  தப்பித்  தன்னிடத்தை
யடைந்த   குறிய  நடையையுடைய  புறாவினது  அழிவிற்கு  அஞ்சித்
தன்னழிவிற்கு     அஞ்சாது     துலாத்தலையுட்புக்க     வரையாத
வண்மையையுடைய  வலியோனது  மரபினுள்ளாய்! பகைவரை வென்ற
மாறுபாட்டான்  மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளிக்குத் தம்பி!
நீண்ட   அம்பினையும்  வளைந்த  வில்லினையுமுடைய  மறவர்க்குத்
தலைவ!  விரைந்த  குதிரையையுடைய  கைவள்ளியதோன்றால்; நினது
பிறப்பின்கண்    ஐயப்பாடுடையேன்;    ஆத்தியாற்    செய்யப்பட்ட
தாரையுடைய    நினக்கு    முன்னுள்ளார்    யாவரும்    பார்ப்பார்
வெறுக்கத்தகுவன செய்யார்; மற்று இவ்வெறுக்கத்தக்க செய்கை நினக்கு
நீர்மையை  யுடைத்தோவென்று,  நீ  வெறுக்கச்சொல்லி நினக்கு யான்
செய்த  தவற்றிற்கு  வெறாயென்னினும், நீ தவறு செய்தாய் போல மிக
நாணினாய்;  இவ்வாறு  தம்மைத்  தப்பியவரைப் பொறுக்குந் தலைமை
இக்குலத்தின்கட்   பிறந்தோர்க்கு   எளிமையுடைத்துக்   காணுமெனக்
காணத்தக்க  வலியையுடையோய்!  நீ  அறிவித்தாய்; ஆகலின், யானே
தவறுசெய்தேன்;    பெருகிவரும்    இனிய    நீரையுடைய   காவிரி
கொழித்திடப்பட்ட    மணலினும்     பலவாக     நின்    வாழ்நாள்
சிறப்பதாக-எ-று. 

முனிவரென்றது  வேணாவியோரை;  அன்றி, சுடர் திரிந்தவழித் திரிந்து
தவஞ்செய்யு முனிவரென்றும் உரைப்ப. 

சீரை - துலாக்கோற்றட்டு. 

‘மற்றிது,     நீர்த்தோ  நினக்கென  வெறுப்பக்  கூறி’  என்றது,  சூது
பொருவுழிக்         கையாற்        கவறுபுதைப்ப       வெகுண்டு
வட்டுக்கொண்டெறிந்தானை   ‘இவ்வாறு  செய்தல்  நின்பெருமைக்குப்
பொருந்துமோ?  அதனால்  நின்பிறப்பிலே  ஓர் ஐயமுடையேன்’ என்ற
சொல்லை. 

இது பொறுத்தற்கரிய பிழையைப்