று பாராது அழித்தலைவல்லையாயிருந்தாய் பெருந்தகாய்! போரின்கண் - எ-று. இலஞ்சியையுடைய அகழியென மாறிக்கூட்டினும் அமையும்; இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக்கு அடையாக்குக. கராம் - முதலையுள் ஒருசாதி. செம்பியன்மருக! நெடுந்தகாய்!
விடரகத்து
நாகம்புக்கென
உருமெறிந்தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச்
சிதைத்தல் வல்லையென மாறிக்கூட்டுக. புள்ளுறு புன்கண்
தீர்த்த பேரருளினோன் மருகனாயும் செருவின் கண் இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன் மறம் வியந்து கூறியவாறு. ஐந்தலையென்றதற்கு ஐந்துதலையெனினும் அமையும். இடங்கருங்குட்டமென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி இடங்கரையுடைய குட்டமென்று உரைப்பாரும் உளர். இடங்கரீட்டத்தென்று பாடம் ஓதுவாருமுளர். (38)
வரைபுரையு மழகளிற்றின்மிசை
வான்றுடைக்கும் வகையபோல
விரவுருவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ
நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த
எம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோரும்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்தென
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே. திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.அவன் ‘எம்முள்ளீர் எந்நாட்டீர்?’ என்றாற்கு ஆவூர்மூலங்கிழார் பாடியது. (இ - ள்.)மலையையொக்கும் இளங்களிற்றின்மேல் ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டை யுடையனபோல விரவின பலநிறத்தை யுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும் பரந்த படையையுடைய விறல் வேந்தே! நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க, நீ அருளிப்பார்க்குமிடம் பொன்பொலியச் செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாகவேண்டினும், வெளிய
திங்களின்
|