புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   361
Zoom In NormalZoom Out

களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. 

திணை - வஞ்சி;  துறை - கொற்றவள்ளை. அவனைக்  கோவூர்கிழார்
பாடியது.
 

(இ -  ள்.)  கூற்றும்      தன்னால்       உயிர்கொள்ளலாங்காலம்
வருந்துணையும்  பார்க்கும்;  அவ்வாறு  காலம்பாராது வேல்நெருங்கிய
படையினையுடைய   பெரியோர்  மாளும்பரிசு  நீ  வேண்டியவிடத்தே
கொல்லும்   வெல்லும்   போரையுடைய   வேந்தே!  எட்டுத்திசையும்
எரிகொள்ளி  எரிந்து  வீழவும், பெரியமரத்தின்கண்ணே இலையில்லாத
நெடியகோடாகிய   வற்றல்   பற்றவும், வெய்யசுடரையுடைய  ஞாயிறு
பலவிடத்தும்  செறிந்து  தோன்றவும்,  மற்றும்  அஞ்சத்தகுவனவாகிய
புட்கள்    குரலிசைப்பவும்,    பல்லு   நிலத்தின்கண்ணே   வீழவும்,
எண்ணெயை  மயிரின்கண்ணே  வார்க்கவும்,  பன்றியேற்றை  ஏறவும்,
ஆடையைக்  களையவும்,  வெளிதாகிய வலிய படைக்கலம் தானிருந்த
கட்டிலுடனே   மறியவும்,   இங்ஙனம்  கனாவினும்  மெய்ம்மையினும்
பொறுத்தற்கரியவற்றைக்  கண்டு,  போர் செய்யும் வலியையுடையோய்!
நின்    மேற்செலவின்    கூறுபாட்டைக்கருதி,    மயக்கம்பொருந்திய
காவலில்லாத    இருத்தலையுடையராய்த்    தம்   பிள்ளைகளுடைய
பூப்போலும்  கண்ணை  முத்தங்  கொண்டு தம்மனைவியர்க்குத் தமது
வருத்தந்தோன்றாமல் மறைக்கும் துன்பத்தையுடைய ஆடவரோடு மிக்க
கலக்கமுற்றது;   காற்றுடன்  எரி  நிகழ்ந்தாற்போன்ற செலவையுடைய
போரின்கண்ணே மிக்க வளவ! நின்னைச் சினப்பித்தோருடைய நாடு -
எ - று.

உற்கலென்றது   வீழ்தலை. உற்கமுதலியநான்கும் உற்பாதமாய் நனவிற்
காணப்பட்டன;    எயிறுநிலத்து    வீழ்தல்    முதலாயின   கனவிற்
காணப்பட்டன.

வரு   திறன்   :   ஈண்டுச்   செல்லுந்திறனென  இடவழுவமைதியாய்
நின்றது.

‘மனையோட்     கெவ்வங் கரக்கும்’ என்பது, ‘‘ஏவ  லிளையர்   தாய்
வயிறு    கரிப்ப’’    (தமிழ்நெறிவிளக்கம்,   மேற்.)   என்றாற்போலப்
பன்மைக்கேற்ப நின்றது.

தான் : ஈண்டு அசைநிலை. 

பெருமரத்துப் பற்றவுமென இயையும். 

இலையினெடுங்கோடு     வற்றல்பற்றவுமென்பதற்கு நெடுங்கோட்டின்
கண்ணே இலையில் வற்றற்றன்மைபற்றவுமென உரைப்பினும் அமையும்.

வேந்தே!   முன்ப!  வளவ!  நீ  இத்தன்மையையாதலால்,  நிற்சினைஇ
யோர்நாடு, பைதன்மாக்களொடு பெருங்கலக்குற்றதெனக் கூட்டுக.

காற்றோடு   எரி   நிகழ்ந்தன்ன   செலவிற்   செருமிகு   வளவவென
மன்னவன் புகழும், நிற்சினைஇ