புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   362
Zoom In NormalZoom Out

றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும் மென்புலத்தூர்களையுடைய
நல்ல நாட்டுக்கு வேந்தே! மலையினின்றிழிந்து   பெரிய கடலைநோக்கி
நிலவெல்லையினின்று இழியும்  பலயாறுகளை யொப்பப் புலவர்யாவரும்
நின்னை நோக்கினர்; நீதான் அவர்க்குப் பரிசில்  கொடுத்தற்பொருட்டுப்
பரிகாரமில்லாத  கணிச்சியென்னும்   படைக்கலத்தை    உயிர்வருந்தச்
சுழற்றிக் கூற்றம் சினந்தாற் போலும் வலியுடனே நினக்கு மறுதலையாகிய
இருவேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்-எ - று.

அறியாதென்பதனை அறியாமலெனத் திரிப்பினும் அமையும்.

வன்புலம்   -   குறிஞ்சியும்  முல்லையும்.  மென்புலம்  -  மருதமும்
நெய்தலும்.

கணிச்சியைக் குந்தாலியென்றும், மழுவென்றும் சொல்லுவர்.

யாணர்த்தாகி விருந்தயரும் நன்னாடென்க.

பொருந!     புலவரெல்லாம் நின்னோக்கினர்; நீ அரசுதலைபனிக்கும்
ஆற்றலை   யாதலின்,   இருவேந்தர்   மண்ணோக்கினை;  அதனால்,
இச்செய்தி புரைதீர்ந்தது, நினக்குப் புதுவதன்றாகலினெனக் கூட்டுக.

புரைதீர்ந்தன்றென்பதற்கு     உயர்ச்சி   தீர்ந்ததெனப்   பொருளாக்கி,
பொருந!   நீ   ஆற்றலையாதலின்,   இருவேந்தர்  மண்ணோக்கினை;
புலவரெல்லாம்  பரிசில் பெறுதற்பொருட்டு நின்னோக்கினர்; இச்செய்தி
நினக்குப்   புதிதன்று;  ஆகலின்  உயர்ச்சி  தீர்ந்ததென்றுரைப்பினும்
அமையும்.

(43) நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற்
றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையோன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே.