புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   363
Zoom In NormalZoom Out

பொறுத்த குணவென்றியான் அரசவாகையாயிற்று. 

(44) இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
தலமரல் யானை யுருமென முழங்கவும்
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்
அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதி லொருசிறை யொடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
 

திணையும்  துறையும்    அவை.    (வாகை,    அரசவாகை) அவன்
ஆவூர்முற்றியிருந்த   காலத்து   அடைத்திருந்த   நெடுங்கிள்ளியைக்
கோவூர்கிழார் பாடியது.
 

(இ - ள்.)  கரிய      பிடியினது       ஈட்டத்தோடு      பெரிய
கயத்தின்கட்படியாவாய்   நெல்லையுடைய  கவளத்துடனே  நெய்யால்
மிதித்துத்    திரட்டப்பட்ட    கவளமும்    பெறாவாய்த்   திருந்திய
மருங்கையுடைய  வலிய  கம்பம்  வருந்தச்  சாய்த்து நிலத்தின்மேலே
புரளும்  கையையுடையவாய்  வெய்தாக  உயிர்த்துச்  சுழலும் யானை
உருமேறுபோல   முழங்கவும்,  பாலில்லாத  குழவி  அழவும்,  மகளிர்
பூவில்லாத  வறிய  தலையை  முடிப்பவும், நீரில்லாத தொழில்புனைந்த
நல்ல    மனையிடத்துள்ளார்   வருந்திக்   கூப்பிடும்   கூப்பீட்டைக்
கேட்கவும்,  இவற்றிற்கு  நாணாது  இவ்விடத்து  நீ இனிதாக இருத்தல்
இன்னாது;     நண்ணுதற்கு     அரிய     வலியையுடைய    வலிய
குதிரையையுடைய   தோன்றால்!   அறத்தை  உடையையாயின்,  இது
நினதன்றோ     என்று     சொல்லித்     திறத்தல்     செய்வாயாக;
மறத்தையுடையையாயின்,     போரால்     திறத்தல்     செய்வாயாக;
அவ்வாறன்றி,  அறத்தையும் மறத்தையுமுடையையல்லையாகத் திறவாது
அடைக்கப்பட்ட  திண்ணிய  நிலையை உடைத்தாகிய கதவினையுடைய
நீண்ட     மதிலுள்     ஒரு     பக்கத்தே    ஒதுங்குதல்  நாணுந்
தன்மையையுடைத்து, இஃது ஆராயுங்காலத்து-எ - று.
 

செய்யென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. 

திறத்தலென்பதனை  இது  திறக்கவென  வியங்கோளீறாக உரைப்பினும்
அமையும்.
 

அம்ம (9) கேட்பித்தற்கண் வந்தது. 

‘அறவியு மறவியு மல்லை யாயின்’ என்று பாடமோதுவாரும் உளர். 

படியா, பெறா என்