புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   371
Zoom In NormalZoom Out


றிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே.
 

திணையும்  துறையும்   அவை.   (வாகை,   அரசவாகை)   அவனை
மருதனிளநாகனார் பாடியது.

(இ - ள்.) தெய்வங்களையுடைத்தாகிய   நெடிய   சிகரங்களையுடைய
மலையின்கண்ணே   முழையின்கண்   துயிலைவெறுத்து  மூரிநிமிர்ந்த
புலியாகிய நிரம்பிய வலியையுடைய ஏற்றை ஊனை விரும்பிய உள்ளம்
செலுத்துதலான்   அவ்விரையைக்  கருதித்  தான்வேண்டிய  இடத்தே
விரும்பிச்   சென்றாற்போல   வடநாட்டு   வேந்தர்  வாட  அவரைக்
கொல்லுதலைக்   கருதி   இன்னாத   வெய்ய   போரைச்   செய்யும்
இயற்றப்பட்ட  தேரினையுடைய  வழுதி!  நீ  கருதியது இப்போராயின்,
பெரிய  உலகத்தின்கண்  யாரோ  அளிக்கத்தக்கார்தாம்?  ஊர்தோறும்
மீன்சுடுகின்ற  புகையினது  புலால் நாறும் நெடிய ஒழுங்கு வயலிடத்து
மருதினது  வளைந்த  கோட்டைச் சூழும் பெரிய நல்ல புதுவருவாயின்
நீங்கி  இப்பொழுது  முழவு  முதலாகிய  ஒலிபொருந்திய  தெய்வங்கள்
தூணத்தைக்   கைவிடும்   பரிசு   பலி   இடத்தின்மாறிய  பாழ்பட்ட
அம்பலத்தின்கண்     முற்காலத்து     நரையையுடைய    முதியோர்
சூதாடுங்கருவியை     இடுதலாற்     குழிந்த     அச்சூதுகருவியினது
நல்லமனையாகிய  இடம்நிறையப்  பலபொறியையுடைய  காட்டுக்கோழி
முட்டையிடும் காடாய்க் கெடும் நாடுடையோர்-எ - று.

கலி - புகழும் அரவமுமாம்.

வழுதி!  அடல்குறித்து  நீ  கருதியது  இதுவாயின்,  விளியும் நாடுடை
யோர்தாம் யார்கொல் அளியரெனக் கூட்டுக.

(53) முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்
ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
வாழே மென்றலு மரிதே தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே.

திணையும்   துறையும்   அவை.   (வாகை,    அரசவாகை)  சேரன்
மாந்தரஞ்சேரலிரும்   பொறையைப்  பொருந்திலிளங்கீரனார் பாடியது.

(இ - ள்.) முற்றி   நீண்ட  சிப்பிக்கண்    முத்துப்போலும்   வெளிய
ஒழுங்குபட்ட  மணற்கண்ணே  ஒளிவிடுகின்ற  மணிகளாற்  கண்ணைப்
பொருகின்ற  மாடத்திடத்து  விளங்கிய வளையையுடைய மகளிர் வேதி
கைக்கண்ணே விளையாடும் விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்குப்
பகைவரான் வந்த இடும்பையைத்தீர்த்த, போர்க்களத்தைத் தனதாக்கிக்
கொண்ட,  யானையையும்  விரைந்த  குதிரையையுமுடைய  பொறைய!
விரித்துச்சொல்லிற் பரக்கும்; தொகுத்துச்சொல்லிற் பொருள் ஒழிவுபடும்;