புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   382
Zoom In NormalZoom Out

யென இயையும். 

பாண!   நீ செலின்,  நெடுந்தகை, பொருநன், குருசில், உறந்தையோன்;
அவன்  பிறன்கடைமறப்ப  நல்குவன்;  நீ  ஈங்கு  எவன்  செய்தியோ
வெனக் கூட்டுக. 

‘உட்பகையொருதிறம்   பட்டென’  என்பதற்கு  உள்ளபகை  சந்தாகிய
ஒருகூற்றிலே பட்டதாகவென்று உரைப்பினும் அமையும். 

பகட்டினுடையதோற்றம் பொலிவுபெறவென்பாரும் உளர். 

‘புட்பகை  யேவானாகலின்’ என்றோதி, உள்ளபகை தம்மிற் கூடிற்றாக,
புள்  நிமித்தத்திற்குப்பகைவன்  ஏவானாகலிற்  சாவேம்யாமென மறவர்
தோள்புடைப்பவென்று உரைப்பாரும் உளர். புட்பகையென்று இவனுக்கு
ஒருபெயர். 

(69) கையது கடனிறை யாழே மெய்யது
புரவல ரின்மையிற் பசியே யரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி யுடுத்த வுயவற் பாண
பூட்கை யில்லோன் யாக்கை போலப்
பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
வையக முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி யாயின் மன்னர்
அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக்
குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்
பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்
ஒள்ளெரி புரையு முருகெழு பசும்பூட்
கிள்ளி வளவற் படர்குவை யாயின்
நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகற்
றேர்வீ சிருக்கை யார நோக்கி
நீயவற் கண்ட பின்றைப் பூவின
ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினு மிலையே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பாணாற்றுப்படை) சோழன்
குளமுற்றத்துத்   துஞ்சிய  கிள்ளிவளவனைஆலத்தூர்கிழார் பாடியது. 

(இ     - ள்.) நின்  கையகத்தது,  இலக்கணமுறைமை நிரம்பிய; யாழ்
உடம்பின்   கண்ணது,  ஈத்தளிப்போரில்லாமையாற்பசி;  அரையதாகிய
வேற்றிழை   ஊடுபோன   வேர்ப்பால்   நனைந்த  சீரையை  அற்றம்
மறைத்து     உடுத்த     வருத்தத்தையுடைய     பாண!    மடியால்
மேற்கோளில்லாதவன் உடம்பையொப்பப்  பெரிதாகப் புற்கென்ற மிகப்
பெரியசுற்றத்தையுடையையாய்    உலகமெல்லாவற்றையுஞ்   சூழ்வந்து
பின்னை     என்னை,   மெல்ல       வறுமைதீர்ப்பார்   யாரெனக்
கேட்கின்றாயாயின்,      கேளாய்;      வேந்தரது     கொல்யானை
புண்பட்டுவருந்தும்      கொடியெடுக்கப்பட்ட        பாடிவீட்டின்கட்
குருதிப்பரப்பின்கண்ணே  யானையைக்     கொன்று   புலாலையுடைய
போர்க்களத்தையுண்டாக்கிய   போர்செய்யும்     படையையுடையவன்,
உயர்ந்த          நிலையையுடைத்தாகிய          மாடத்தையுடைய
உறையூரிடத்திருந்தான்;      அவன்,     பொருவோர்    பொருட்டு
எடுக்கப்பட்ட வேலையுடையனாய் ஒரு பெற்றியே பகைவர் நாட்டின்கட்
போதலும்     உரியன்;     சுற்றப்பட்ட    மாலையையும்   ஒள்ளிய
எரியையொக்கும்   நிறம்பொருந்திய   பசும்பொன்னாற்  செய்யப்பட்ட
பூணினையும்    உடைய   கிள்ளிவளவனிடத்தே   செல்குவையாயின்
அவனது     நெடிய     வாயிலின்கட்    காலம்பார்த்து    நிற்றலும்
உடையையல்லை;  விளங்கிய பகற்பொழுதின்கண் அவன் பரிசிலர்க்குத்
தேர்வழங்கியிருக்கும் இருப்பை நின் கண்ணாரப் பார்த்து நீ அவனைக்
கண்டபின்பு  பூவின்கண் ஆடும் வண்டு ஊதாத பொற்றாமரைப்பூவைச்
சூடாயாதல்  அந்நெடுங்கடை  நிற்றலினும் உடையையல்லை; அதனால்,
ஆண்டுச் செல்வாயாக-எ - று. 

தகை தார் தகைத்தாரென நின்றது; மேம்பட்ட தாருமாம். 

பாண!  ஒக்கலையாய் வளைஇவினவுதியாயின்,   தானையையுடையவன்,
உறந்தையோன்:     அவன்பாற்    படர்குவையாயின்,    நின்கையது
யாழாதலானும்,  மெய்யது  பசியாதலானும், நெடுங்கடை நிற்றலுமில்லை;
நீ     அவற்     கண்டபின்றைத்     தாமரை     சூடாயாதல்
அதனினுமிலையெனமாறிக் கூட்டுக. 

பூவாகிய