புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   383
Zoom In NormalZoom Out


வேண்டா;அவனது தாள் வாழ்க-எ - று. 

பாண!     தணிக  எனக்கூறி  வினவலானா  இரவல!  விறலியொடு
மென்மெலச்     செல்குவையாயினென     இயையும்;     வியனகர்ச்
செல்வையாயினெனவும் அமையும். நகரையுடையநாடென இயைப்பாரும்
உளர். 

‘விறகொய்மாக்கள்       பொன்பெற்றன்னதோர்      தலைப்பாடன்று’
என்பதற்கு   விறகிற்குச்  சென்றோர்  பொன்பெற்றாற்  போல்வதொரு
தலைப்பாடதென்று  பொருளுரைப்பாரும்  உளர்;  அதுபொருந்துமேல்
அறிந்து கொள்க. 

(71) மடங்கலிற் சினைஇய மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
அறனிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்
அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. 

திணை   -  காஞ்சி;   துறை -   வஞ்சினக்காஞ்சி.   ஒல்லையூர்தந்த
பூதப்பாண்டியன் பாட்டு. 

(இ     - ள்.) சிங்கம்போலச் சினந்து மீளாத மேற்கோள் பொருந்திய
உள்ளத்தினையும்  மிகைத்துச்  செல்லும்  படையையுமுடைய  வேந்தர்
தம்மில்  ஒப்பக்கூடிவந்து  என்னொடு  பொருவேமென்று  சொல்லுவர்;
அவ்வேந்தரைப்   பொறுத்தற்கரிய  போரின்கண்ணே அலறப்பொருது
தேருடனே     அவர்      உடைந்தோடும்       புறக்கொடையைக்
கண்டிலேனாயின்,எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின
மையுண்ட  கண்ணினையுடைய  இவளினும் நீங்குவேனாக; அறமானது
நிலைகலங்காத    அன்பினையுடைய    அவைக்களத்து    அறத்தின்
திறப்பாடில்லாத   ஒருவனை   வைத்து  முறைகலங்கிக் கொடுங்கோல்
செய்தேனாகுக;  மிக்க  புகழையுடையவையையாற் சூழப்பட்ட செல்வம்
பொருந்திய