புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   386
Zoom In NormalZoom Out


குடிமக்களைக்     கொள்ளுங்கடமையன்றி    மிகத்தரவேண்டுமென்று
இரத்தலை. 

தாயம்   சிறியோன் பெறின், அது மிகவும்   சிறந்தன்று; வேந்தர் அரசு
கெழுதிரு  விழுமியோன்  பெறுகுவனாயின்,  நன்றும்  நொய்தாலெனக்
கூட்டி வினைமுடிவுசெய்க. 

மன்: ஆக்கத்தின்கண்வந்தது. அம்ம:அசைநிலை. 

(76) ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும்
புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை
இன்றி னூங்கோ கேளலந் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடுஞ் செம்மலு மறியார் கூடிப்
பொருது மென்று தன்றலை வந்த
புனைகழ லெழுவர் நல்வல மடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.
 

திணை    -    வாகை;      துறை -   அரசவாகை.     பாண்டியன்
தலையாலங்கானத்துச்          செருவென்ற       நெடுஞ்செழியனை
இடைக்குன்றூர்கிழார் பாடியது. 

(இ - ள்.) ஒருவனை   ஒருவன்   கொல்லுதலும்   ஒருவற்கு ஒருவன்
தோற்றலும்  புதிதன்று; இந்தவுலகத்தின் கண்முன்னே தொட்டு இயல்பு;
இன்றையின்முன்  கேட்டறியேம்: திரண்டதாளையுடைய மன்றத்திடத்து
வேம்பினது  பெரியகொம்பின்கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை நீண்ட
கொடியாகிய  உழிஞைக்கொடியுடனே விரவிச் செறியத் தொடுக்கப்பட்ட
தேன்மிக்க மாலையை வளையமாலையுடனே சிறப்பச் சூடி ஓசையினிய
தெளிந்த   போர்ப்பறை   யொலிப்பக்   காட்சி  தக நாடுபொருந்திய
செல்வத்தினையுடைய    பசும்பொன்னாற்செய்த   பூணை   அணிந்த
நெடுஞ்செழியனது    பெருமையையும்    உயர்ந்த   தலைமையையும்
அறியாராய்த்   தம்மிற்கூடிப்   பொருவேமென்று  தன்னிடத்து  வந்த
புனைந்த     வீரக்      கழலினையுடைய       இருபெருவேந்தரும்
ஐம்பெருவேளிருமாகிய  ஏழரசருடைய  நல்ல வென்றி அடங்கத் தான்
ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல்-எ- று. 

ஒருவனை     ஒருவன்    அடுதலும்    தொலைதலும்   புதுவதன்று;
இவ்வுலகத்து   இயற்கை;  செழியன்  பொருதுமென்று  வந்த  எழுவர்
நல்வலம்  அடங்க  ஒருவனாகித்  தெரியலை  மாலையொடு காண்டகச்
சூடிக்  கிணை  கறங்கப்பொருது  களத்து  அடல்  இன்றின்  ஊங்கோ
கேளலமெனக் கூட்டி வினை முடிவுசெய்க. 

(77) கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப்