பத்தை மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து, ‘சிறப்புடையேம், படையாற் பெரியேம் யாங்கள், நம்மிற் பொருவானும் இளையன், கொள்ளையும் பெரிது’ என இகழ்ந்துவந்த நிலையில்லாத வீரர் புற்கென்ற கண்ணராய் நின்றவிடத்து நில்லாது புறத்தே போக அவரை இப்போர்க்களத்தின்கண்ணே கொன்றிடுதலும் உடம்படானாய் அவ்விடத்து அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் நாணினராய் இறந்துபடத் தந்தையருடையவாகிய தங்களூரிடத்துத் தெளிந்த போர்ப்பறை யொலிப்பச் சென்று அவ்விடத்தே கொன்றான்-எ - று. தந்தைதம்மூரென்றதனை, ‘‘ஏவ லிளையர்தாய்வயிறு கரிப்ப’’ என்றாற்போலக் கொள்க.தந்தைதம்மூரென்றது, தாம் தோன்றிச் செய்த நகரியன்றி உறையூரும் கருவூருமுதலாகிய ஊர்களை. (79) மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி மன்ற வேம்பி னொண்குழை மலைந்து தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது.(1. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூகிழார் பாடியது.) (இ - ள்.) தனது பழைய நகரிவாயிற்கட் குளிர்ந்த பொய்கையின் கண்ணே மூழ்கி மன்றத்திடத்து வேம்பினது ஒள்ளிய தளிரைச் சூடித்தெளிந்த ஓசையையுடைய பறைமுன்னாகக் களிறுபோலப் பெருமிதத்தோடு நடந்த வெய்ய போரையுடைய நெடுஞ்செழியனும் வந்தான்; அவனோடு பகைத்த நிலையில்லாத மறவர் பலரே; பகற்பொழுது மிகச் சிறிதாதலால், அவருட் சிலர் படாதொழியவும் கூடும்-எ-று. போர் மடந்தையைப் புணர வருகின்ற கன்னிப்போர் ஆதலாற் பனிக்கயமண்ணி யென்றார். கிணை முன்னர்வருதல், யானைக்கும், இவனுக்கும் ஒக்கும். (80) இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை யொசிய வெற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே. திணை - தும்பை; துறை - எருமைமறம். சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டுநின்றானைச் சாத்தந்தையார் பாடியது. (இ - ள்.) இனிய அழன்ற கள்ளினையுடைய
|