யினையும் தேரையும் குதிரையையும் படைக்கலத்தொழில் அமைந்த வீரரையும் உடையேம் யாமென்று எனது மிக்க வலிக்கு அஞ்சாதே மாறுபடுஞ் சினம் பெருகிப் புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம்பொருந்திய அரசரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே சிதறப்பொருது முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின், பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வார், தாங்கள் சென்றடையும் நிழல் காணாதே கொடியன் எம்முடைய வேந்தனென்று கருதிக் கண்ணீரைப் பரப்பிக் குடிமக்கள் பழிதூற்றும் கொடுங்கோலையுடையேனாகுக; உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடையமாங் குடிமருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய புலவர் பாடாது நீங்குக, எனது நிலவெல்லையை; என்னாற் புரக்கப்படுங் கேளிர்துயரம் மிக இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யான் உற-எ-று. என் நிழல் வாழ்நராகிய குடியென்க. உளையக்கூறியதனைத் தம்மிடத்திருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத்து எதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க. இவனென்றார், தம் கருத்துக்கண்அணுமையான். அகப்படேனாயினென்றது ஈண்டுப் பிறவினைமேல் நின்றது. வேந்தரைத் தாக்கி அகப்படேனாயின், கோலேனாகுக; இன்மையானுற என் நிலவரை புலவர்பாடாது வரைகவென மாறிக்கூட்டி
வினைமுடிவு
செய்க. ‘நகுதக் கனரே
நாடுமீக் கூறுநர்’ என்பதனை, நாட்டாரால்
மீக்கூறப்பட்ட
மந்திரிச்சுற்றமுதலாயினார்
நகுதக்கனரெனப்
பிரித்துரைப்பினும் அமையும். ‘நிலவரைப் புரப்போர்’ எனவும் பாடம். (73)
மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி
ஈயென விரக்குவ ராயிற் சீருடை
முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்
இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத்
தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென்
உள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற்
றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் காலகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்
வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய
தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே. திணையும் துறையும் அவை. (காஞ்சி, வஞ்சினக் காஞ்சி) சோழன் நலங்கிள்ளி பாட்டு. (இ - ள்.) மெல்ல வந்து எனது நல்ல அடியையடைந்து எமக்கு ஈயவேண்டுமென்று தாழ்ந்
|