பவரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்ற நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே. திணையும் துறையும் அவை.(வாகை, அரச வாகை) அவனை அவர் பாடியது. (பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர்கிழார் பாடியது). (இ-ள்.) சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக்கழலினைச் செறித்துக் குடுமியொழிக்கப்பட்ட சென்னிக்கண்ணே வேம்பினது ஒள்ளிய தளிரை நெடியகொடியாகிய உழிஞைக்கொடியோடு சூடிக் குறிய வளைகளையொழிக்கப்பட்ட கையின்கண்ணே
வில்லைப் பிடித்து நெடிய தேரினது மொட்டுப் பொலிவுபெற நின்றவன் யாரோதான்? யாரேயாயினும், அவன் கண்ணி வாழ்வதாக; தாரையணிந்து ஐம்படைத்தாலி கழித்ததும் இலன்; பாலையொழித்து உணவும் இன்றுண்டான்; முறைமுறையாக வெகுண்டு மேல்வந்த புதியவீரரை மதித்ததும் அவமதித்ததும் இலன்; அவரை இறுகப் பிடித்துப் பரந்த ஆகாயத்தின்கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததுவும், இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன்-எ- று.
யார்கொலென்றது வியப்பின்கட் குறிப்பு.
இழித்தன்றென்பது இழிந்தன்றென மெலிந்துநின்றது.
(78) வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூ ராங்கட்
டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) வளைந்த சந்துகளாற் பொலிந்த வலிபொருந்திய போரின்கண் நிலைதளராத பொறையினையுடைய தாளினையும் வருத்தற்கரிய மிக்க வலியையுமுடைய என் இறைவன் மூரிநிமிர்ந்து முழையின்கட் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை
நோக்கிவந்தாற் போன்ற மாறுபடுதற்கரிய மார்
|