ஆமூரிடத்து வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து ஒருகால் மண்டியாக மார்பிலே மடித்துவைத்து ஒருகால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி முதுகின்கண் வளைத்துப் பசித்து மூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையையொப்பத் தலையுங் காலுமாகிய இரண்டிடமும் முறிய மோதி அக்களத்தின்கட் புக்க அம்மல்லனை எதிர்ந்துநின்று கொன்ற நிலையை, கண்டால் உவப்பினும் உவவானாயினும், இவன் தந்தையாகிய வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக - எ - று. என்றது, தந்தையுடன் வெறுத்துப்போந்தான் அமருட் புகுந்து இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான்; விரும்பா விடின் அஞ்சுகின்றானென்பதாம். ‘பணைமுயலும் யானைபோல வொருதலை யொசிய வொற்றி’ என்று பாடமோதி, அம்மல்லன் முற்கூறாயினும் பிற்கூறாயினும் ஒருதலை முறிய மோதியென்றுஉரைப்பாரும் உளர். தில்: விழைவின்கண் வந்தது.
(81) ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே
கார்ப்பெய லுருமின் முழங்கலா னாவே
யார்கொ லளியர் தாமே யார்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே.
திணை - வாகை; துறை - அரசவாகை. அவனை அவர் பாடியது. (இ-ள்.) படையினது ஆரவாரம், எழுகடலுங் கூடி ஒலிக்கும் ஒலியினும் பெரிது; அவனுடைய களிறு, கார்காலத்து மழையின்கண் இடியினும் முழங்குதலை அமையா; நாராற் பயிலத்தொடுக்கப்பட்ட ஆத்திக்கண்ணியையும் இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின்கட் பட்டோராகிய இரங்கத்தக்கார்தாம் யார்கொல்?-எ - று.
(82) சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டி னிணக்கு மிழிசினன் கையது
போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொ
டார்புனை தெரிய னெடுந்தகை போரே.
திணையும் துறையும் அவை. (வாகை, அரச வாகை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) ஊரின்கண் விழாத் தொடங்கிற்றாக அவ்விழாவிற்கு உதவப் போகவும் தன்மனைவி பிள்ளைபெறுதலைப் பொருந்தினாளாக அவள் மெய்ந்நோவிற்கு உதவப்போகவும் வேண்டி, பெய்கின்ற மழையையுடைய ஞாயிறு வீழ்ந்தபொழுதின்கட் கட்டிலைப்பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்தது, ஊரைக் கொள்ளவந்த வீரனோடு ஆத்தியாற்றொடுக்கப்பட்ட கண்ணியையுடைய பெருந்த
|