மாயினேம்; போரையேற்று என் தலைவன் போர்க்களத்தின்கட் புகிற் கல்லென்னும் ஒலியையுடைய பெரிய ஊரின்கட் போர்செய்தற்கெடுத்த விழாவினையுடைய இடத்துத் தோள்வலி பேசி இன்பமுற்றுப் போந்த வீரர்க்கு உப்புவிற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை ஒப்பன்-எ - று. என்னை, புற்கையுண்டும் பகைவெல்லும் பெருந்தோளனாம்; யாம், அவன் சிறைப்புறத்திருந்தும் பசப்பை வெல்லமாட்டாமையால் பொன் போன்றன மெனத் தன் வேட்கைமிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு என்னை புற்கையுண்டும் வழங்கும் பெரியதோளை யுடையனாயும் நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும் பொன்போற் பசந்தேமென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரும்உளர். உமணர் வெரூஉம் துறையன்னனென்றதனாற் பயன்: வருத்துங் கூற்றின் ஆடவரையும் மகளிரையும் ஒக்கவருத்துவதல்லது அருளுமாறு கற்றிலனோவென்னும் நினைவிற்றாக்குக.
(85) என்னைக் கூரிஃ தன்மை யானும்
என்னைக்கு நாடிஃ தன்மை யானும்
ஆடா டென்ப வொருசா ரோரே
ஆடன் றென்ப வொருசா ரோரே
நல்ல பல்லோ ரிருநன் மொழியே
அஞ்சிலம் பொலிப்ப வோடி யெம்மில்
முழாவரைப் போந்தை பொருந்திநின்|
றியான்கண் டனனவ னாடா குதலே.
திணையும் துறையும் அவை. (கைக்கிளை, பழிச்சுதல்.) அவனை அவர் பாடியது. (இ-ள்.) என்னுடைய தலைவனுக்கு ஊர் இஃது அல்லாமையானும் என்னுடைய தலைவனுக்கு நாடு இஃது அல்லாமையானும் அவனுக்கு இயல்பாய வென்றியை அவனது வென்றியென்று சிறப்பாகச்சொல்லுவர் ஒருபக்கத்தார்; அவனது வென்றியன்றென்று சொல்லுவர் ஒருபக்கத்தார்; பலரும் ஒத்து ஒவ்வாமற் கூறும் இவ்விருவகைப்பட்ட நல்ல வார்த்தையும் நல்லவாயிருந்தன; அவ்வாறு கூறினராயினும்,அழகிய சிலம்பார்ப்ப ஓடிச்சென்று, எம்முடைய மனையின்கண் முழாப்போலும் பக்கத்தையுடைய பனையைப் பொருந்திநின்று, எனது வளையும் கலையு முதலானவை தோற்கும் ஆண்மையுடைமையின், அவனது வென்றியாதல் யான் கண்டேன்-எ-று. பின்னும் ஒருகால் என்னை யென்றதனால், இவரது ஆதரவு தோற்றி நின்றது. நல்லவென்றது இகழ்ச்சிக்குறிப்பு. ஆடென்றதூஉம் ஆடன்றென்றதூஉம்அவனைச் சுட்டியே கூறினமையின், இருநன்மொழியும் நல்லவென்றாரெனினும் அமையும்.
(86) சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வின
|