புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   394
Zoom In NormalZoom Out


வுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.
 

திணை - வாகை; துறை - ஏறாண்முல்லை. 

காவற் பெண்டின் பாட்டு. 

(இ-ள்.)   சிறிய   இல்லின்கண்  நல்லதூணைப் பற்றிநின்று நின்மகன்
எவ்விடத்துளனோவென்று     கேட்பை;     என்னுடைய      மகன்
எவ்விடத்துளனாயினும்  அறியேன்; புலி கிடந்துபோன கன்முழைபோல
அவனைப்  பெற்ற  வயிறோ  இஃது; அவன் செருக்களத்தின்கண்ணே
தோன்றுவன்; அவனைக் காணவேண்டின் ஆண்டுச்சென்று காண்-எ-று.
 

‘ஈன்றவயிறோவிது’  என்ற  கருத்து:  புலிசேர்ந்துபோகிய அளைபோல
அவனுக்கு என்னிடத்து உறவும் அத்தன்மைத்தென்பதாம்.
 

ஓருமென்பதூஉம் மாதோவென்பதூஉம் அசைச்சொல். 

(87) களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந்
தெம்முளு முளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே.
 

திணை - தும்பை; துறை - தானைமறம். 

அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. 

(இ-ள்.)   போர்க்களத்தின்கட்  புகுதலைப்   போற்றுமின்,  பகைவிர்!
போரின்கண்   மாறுபட்டு,  எங்களுள்  வைத்தும்  ஒருவீரன்  உளன்;
ஒருநாள்  எட்டுத்தேரைச்  செய்யுந்  தச்சன்  ஒருமாதங்கூடிக் கருதிச்
செய்யப்பட்டதொரு தேர்க்காலையொப்பன்-எ-று.
 

போரெதிர்ந்து களம்புகலோம்புமின், எம்முளும் உளனெனக் கூட்டுக. 

எம்முளுமென்ற உம்மை சிறப்பும்மை. 

தேர்க்காலோடு உவமை விரைவும் திண்மையுமாகக் கொள்க. 

(88) யாவி ராயினுங் கூழை தார்கொண்
டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்கு திறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே.
 

திணையும் துறையும் அவை. (தும்பை, தானைமறம்) 

அவனை அவர் பாடியது. 

(இ-ள்.)   எப்பெற்றிப்பட்டீராயினும்,     அணியையும்    தூசியையும்
கொண்டு   யாம்   அவனோடு   பொருவோமென்று   சொல்லுதலைப்
பாதுகாமின், உயர்ந்த வலியையுடைய பாடஞ்செய்யும் விளங்கிய நெடிய
வேலையுடைய    இளையோர்க்குத்    தலைவனாகிய  சுடர்விடுகின்ற
நுண்ணிய  தொழிலையுடைய பூணணிந்த அழகிய வலிய மார்பினையும்
களவேள்வி   முதலாகிய   விழாச்சிறந்த   நல்ல  போரைச்  செய்யும்
முழாப்போலுந்தோளினையுமுடைய என் இறைவனைக் காண்பதற்குமுன்;
கண்டால் அது செய்தல் அரிதாகலான்-எ - று.
 

என்னையைக்