புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   397
Zoom In NormalZoom Out

லு மூரே. 

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. 

அவன்மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது. 

(இ-ள்.)    மலர்ந்த   பூவையுடைய   தும்பைக்கண்ணியை  அணிந்த
அழகிய    வலிய    மார்பினையும்    திரண்டு    நீண்ட   பெரிய
கையினையுமுடைய   என்  இறைவன்மகன்  இளையோனுக்குப்  பகை
இரண்டு   தோன்றின;   அவற்றுள்   பூப்போலும்  வடிவினையுடைய
மையுண்டகண்கள்   பசப்பத்தோள்   மெலியத்   தன்னைப்  பார்த்த
மகளிரை  நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின் உள்ளதாயது
ஒருபகை;     அவன்     எடுத்துவிட்டுச்     சென்றிருக்கும்    ஊர்,
விழாவில்லையாயினும், உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமற்
செம்மறியாட்டுத்   தசையைத்   தின்ற   சுற்றத்துடனே  யாறுங்குளனு
முதலாகியவற்றின் துறைநீரை அவன்யானை முகந்துண்ணுமெனக் கருதி
அவ்விடத்துறைதலை  வெறுக்கும்; அவ்வெறுத்ததனால் உளதாயது ஒரு
பகை; ஆகப் பகை இரண்டு-எ - று.
 

பசந்து       நுணுகி        என்னும்       செய்தெனெச்சங்களைச்
செயவெனெச்சமாக்கி,  அவற்றைப்  பிணித்தன்றென்னும்  வினையோடு
முடிக்க.
 

ஓகாரம் : அசைநிலை. 

இதனால், அவன் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு. 

(97) போர்க்குரைஇப் புகன்றுகழித்தவாள்
உடன்றவர்காப்புடை மதிலழித்தலின்
ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர்
நறுங்கள்ளி னாடுநைத்தலிற்
சுரைதழீஇய விருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே
களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர்
குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற்
பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலிற்
களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே
அவன்றானும், நிலந்திரைக்குங் கடற்றானைப்
பொலந்தும்பைக் கழற்பாண்டிற்
கணைபொருத துளைத்தோ லன்னே
ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட்
பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர்
நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற்
கிறுக்கல் வேண்டுந் திறையே மறுப்பின்
ஒல்வா னல்லன் வெல்போ ரானெனச்
சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற்
கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி)

அதியமான் நெடுமானஞ்சியை அவர் பாடியது.

(இ-ள்.)   போரைச்செய்தற்குப் புடைபெயர்ந்து உலாவி  விரும்பி
உறைகழித்த வாள்கள்தாம், பகைத்தவரது காவலையுடைய