புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   402
Zoom In NormalZoom Out


அரணை   யழித்தலால்   அவர்தசையின்கண்ணே     உறக்குளித்துக்
கதுவாய்போய்  வடிவிழந்தன;  அவன் வேல்கள்தாம்,  குறும்பர்சேர்ந்த
அரண்களை  வென்று  அப்பகைவரது  நறிய மதுவையுடைய நாட்டை
யழித்தலாற்  சுரையோடு  பொருந்திய  கரிய காம்புடனே ஆணிகலங்கி
நிலைகெட்டன;   அவன்களிறுதாம்,   கணையமரத்தால்  தடுக்கப்பட்ட
கதவைப்பொருது     அப்பகைவரது     திரண்ட    களிற்றையுடைய
அரணையழித்தலாற்    பரிய   பிணித்தலையுடையவாகிய   கிம்புரிகள்
கழன்றன;  அவன்குதிரைதாம்,  பரந்துவந்து  ஒக்கப்  பொருத  வீரரது
பொன்னாற்  செய்யப்பட்ட  பசிய  மாலையையுடைய மார்பு உருவழிய
ஓடுதலாற்   போர்க்களத்தின்கட்   பொருது   வருந்திய   குருதியான்
மறுப்பட்ட  குளம்பையுடையவாயின;  அவன்தானும்,   நிலவகலத்தைத்
தன்னுள்ளே  யடக்கும்  கடல்போன்ற படையுடனே  பொன்னானியன்ற
தும்பைக்  கண்ணியையுடைய,   கழல்வடிவாகவும்  கிண்ணிவடிவாகவும்
செய்து      செறிக்கப்பட்டு       அம்புபடுதலால்       துளைபட்ட
பரிசையையுடையன்;    அவ்விடத்து   அவனால்   வெகுளப்பட்டோர்
பிழைத்தல்   எங்கேயுள்ளது?   பெரியதாளினையும்  ஒன்றோடொன்று
தெற்றிக்கிடக்கின்ற     கதிரினையுமுடைத்தாகிய    நெல்லினையுடைய
தலைமை பொருந்திய பழையவூர் நுங்கட்கு உரித்தாக வேண்டுவிராயிற்
போய்  அவனுக்குத் திறைகொடுத்தல் வேண்டும்; கொடீராயின், அதற்கு
உடம்படுவானல்லன்        வெல்லும்        பூசலையுடையானென்று
யான்சொல்லவும்  தெளியீராயின்,  நுமக்கு,  மெல்லிய  தன்மையையும்
கழன்மணியினது  கனியால்  கூறுபடுத்துச்   சுருட்டப்பட்ட  இனமாகிய
சிலவாகிய பனிச்சையையும் குறிய  வளையையுமுடைய உரிமைமகளிரது
தோளைப்     பிரிந்துறைதல்    வியப்பன்று;    அதனை    யறிந்து
போர்செய்ம்மின்-எ - று.

அறிந்தாடுமினென்ற      கருத்து,      அறியிற்      போர்செய்தல்
அரிதென்பதாம். குறும்பு - சிற்றரண்.

கடற்றானையினையும்,   பொலந்தும்பையினையுமுடைய   அவன்றானு
மென்க.

(98) முனைத்தெவ்வர் முரணவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பினின்

இனக்களிறு செலக்கண்டவர்

மதிற்கதவ மெழுச்செல்லவும்

பிணனழுங்கக் களனுழக்கிச்

செலவசைஇய மறுக்குளம்பினின்

இனநன்மாச் செலக்கண்டவர்

கவைமுள்ளிற் புழையடைப்பவும்

மார்புறச் சேர்ந்தொல்காத்

தோல்செறிப்பினின் வேல்கண்டவர்

தோல்கழியொடு பிடிசெறிப்பவும்

வாள்வாய்த்த வடுப்பரந்தநின

மறமைந்தர் மைந்து கண்டவர்

புண்படுகுருதி யம்பொடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென

உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்

கூற்றத் தனையை யாகலிற் போற்றர்

இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்

திறங்குகதி ரலம்வரு கழனிப்

பெரும்புனற்