|
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போ
இன்னு மாறாது சினனே யன்னோ
உய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண்டன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே.
திணையும் துறையும் அவை. வாகை; அரசவாகை. அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது. (இ-ள்.) கையின்கண்ணது வேலே; காலின்கண்ண அணிந்த வீரக்கழல்; உடம்பின்கண்ணது வேர்ப்பு; மிடற்றின்கண்ணது ஈரம்புலராத பசிய புண்; பகைவர் தொலைதற்கு ஏதுவாகிய வளரும் இளைய பனையினது உச்சிக்கண்ணே வாங்கிக்கொள்ளப்பட்ட ஊசித்தன்மையைப் பொருந்திய வெளியதோட்டையும் வெட்சியினது பெரிய மலரையும் வேங்கைப்பூவுடனே விரவிச் சுருண்ட கரியமயிர் பொலிவுபெறச் சூடிப் புலியொடு பொருத வலிய யானையையொப்ப இன்னமும் நீங்காது, சினம்; ஆதலால், ஐயோ! பிழைத்தாரல்லர், இவனைச்சினப்பித்தவர்கள்; பகைவரை; வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய புதல்வனைப் பார்த்தும் சிவப்பமையாவாயின-எ - று. காலனபுனை கழலென்பது வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்தோறும் வென்றுகட்டினவெனவுமாம். உம்மை : சிறப்பு தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச்செறுவர் நோக்கிய கண் சிறுவனைநோக்கியும் சிவப்பானா; ஆதலால், அன்னோ! இவனுடற்றியோர் உய்ந்தனரல்லரெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. வட்காரென்பது வட்கரெனக்குறுகிநின்றது : வட்கர் - குற்ற மெனினும் அமையும்.
(101) ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூ ணணிந்த யானை யியறேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் றாளே.
திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை. அவனை அவர் பாடியது. (இ-ள்.) யாம் ஒருநாட்செல்லேம;் இரண்டுநாட்செல்லேம்; பல நாளும் பயின்று பலரோடுகூடச்செல்லினும் முதற்சென்றநாள்போன்ற விருப்பத்தையுடையன், அணிகலம் அணிந்த யானையையும் இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில்பெறுங்கால் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும்,
|