புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   410
Zoom In NormalZoom Out


துளி    கலக்க    மழைபெய்யினும்   பெய்யாதொழியினும்   அருவி
கொள்ளிற்கு  உழுத    பரந்தநிலத்திடை    நீரோடுகாலாக    ஓடக்
கண்ணேணியையுடைய   நெடியமலையினது  சிகரந்தோறும்  இழிதரும்
நீரினும்   மிக  இனிய  மென்மையையுடைய  வேள்  பாரிபக்கலே  நீ
பாடிச்செல்லின்-எ - று.

விறலி!  பாரிவேள்பாற்  பாடினை செலின், சேயிழை பெறுகுவையெனக்
கூட்டுக.

அவன்மலையாதலால்,    எக்காலமும்    அருவி    கோடுதோறிழிதரு
மெனப்பட்டது.

புதுமலர்த்   தண்சிதர்   கலாவப்பெய்யினும்  பெய்யாதாயினும்  உழை
காலாகக் கோடுதோறிழிதரும் அருவிநீரினும் இனியவென இயையும்.

எனவே அவன் குணங்கள் தோன்றிநின்றன.

(106) நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கைவண் மையே.

திணை - அது. துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)

அவனை அவர் பாடியது.

(இ-ள்)   நல்லனவென்றும்  தீயனவென்றும்  சொல்லப்படுவன சூடும்
பூவாதலால்   அவை   இரண்டினும்வைத்து  எண்ணப்படாத  குவிந்த
பூங்கொத்தினையும்  புல்லிய  இலையையுமுடைய  எருக்கம்பூவாயினும்
ஒருவனுடையனவற்றைத்  தெய்வங்கள்  விரும்பேமென்னா; அதுபோல,
யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும்
பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடையன்-எ - று.

'குவியிணர்ப்     புல்லிலை    யெருக்கம்'    என்றது    முதற்கேற்ற
அடையடுத்த ஆகுபெயர்.

உம்மை : இழிவுசிறப்பு.

மெல்லியரென்பதற்கு வறுமையுற்றாரென்றும் உரைப்பர்.

(107) பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்

மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி)

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)   பாரிபாரியென்றுசொல்லி  அவன்  பல புகழையும் வாழ்த்தி
அவ்வொருவனையே     புகழ்வர்,     செவ்விய      நாவையுடைய
அறிவுடையோர்;    பாரியாகிய   ஒருவனுமேயல்லன்,   மாரியுமுண்டு,
இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு-எ - று.

உலகுபுரத்தற்கு   மாரியும்    உண்டாயிருக்கப்    பாரியொருவனைப்
புகழ்வர் செந்நாப்புலவரெனப் பழித்ததுபோலப் புகழ்ந்தவாறு.

(108) குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆர மாதலி னம்புகை யயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு
பாரியும் பரிசில ரிரப்பின்

வாரே னென்னா னவர்வரை யன்னே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி)

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)    குறத்தி    மடுத்தெரிக்கப்பட்ட   வற்றிய கடைக்கொள்ளி
சந்தனமாதலால்   அதன்  அழகியதாகிய  புகை  அதற்கு  அருகாகிய
சாரற்கண்    வேங்கையின்    பூங்கொம்பின்கட்    பரக்கும்   பறம்பு
பாடுவார்க்குக்     கூறிட்டுக்கொடுத்தலின்     அவருடையதாயிற்று;
தன்மத்தைப்  பரித்துப்  பாரியும் பரிசிலர் வேண்டுவாராயின் அவ்வழி
வாரேனென்னானாய் அவ ரெல்லையின்கண்ணே நிற்பன்-எ - று.

சந்தனப்புகை