புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   412
Zoom In NormalZoom Out


கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ
கூர்வேற் குவைஇய மொய்ம்பிற்
றேர்வண் பாரி தண்பறம்பு நாடே

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)    பாறையும்   சிறுகுவடும்  (சிறுமலையும்)  கூடிய தலையை
யுடையவாகிய   எட்டாம்பக்கத்து   (எட்டாந்திதி)   ப்  பிறைபோலும்
வளைந்த  கரைகளையுடைத்தாகிய  தெளிந்த  நீரையுடைய சிறியகுளம்
பாதுகாப்பார்  இன்மையின்  உடைவதுபோலும், கூரிய வேலையேந்திய
திரண்ட தோளையுடைய தேர்வண்மையைச் செய்யும் பாரியது குளிர்ந்த
பறம்பு நாடு -எ - று.

நாடு  குளங்கீள்வதென  இடத்துநிகழ்பொருளின்தொழில்  இடத்துமேல்
ஏறி நின்றது.

மாதோ : அசைநிலை. 

(119) கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
செம்புற் றீயலி னின்னளைப் புளித்து
மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ
நிழலி னீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை யிறந்தும்
இரவலர்க் கீயும் வள்ளியோ னாடே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)   கார்காலத்து  மழை  பெய்து  மாறிய காட்சியினியகாலத்துக்
களிற்றுமுகத்தின்கட்  புகர்  (புகர்-புள்ளி)  போலத்  தெறுழினது மலர்
பூப்பச்  செம்புற்றின்கண் ஈயலை இனிய மோரொடு  கூட்டி அடப்பட்ட
புளிங்கறியை யுடைத்து; மெல்லிய தினையாகிய புதுவருவாயையுடைத்து,
முன்பு;  இனி  அது  கெடுங்கொல்லோ! நிழலில்லாத நெடிய வழிக்கண்
நின்ற   தனிமரத்தையொப்ப   முரசையுடைய   அரசரின்   மிகுத்தும்
இரவலர்க்கு வழங்கும் வண்மையை யுடையவனது நாடு-எ - று.

பூப்பவென்னும்    வினையெச்சம்    இன்னளைப்    புளித்தென்னும்
குறிப்பொடு முடிந்தது.

வள்ளியோன்  நாடு  இன்னளைப்  புளித்து;  யாணர்த்து; அது நந்துங்
கொல்லோவெனக் கூட்டுக.

தெறுழென்றது   காட்டகத்ததொரு  கொடி;  புளிமாவென்றுரைப்பாரும்
உளர்.

(120) வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலிற் றோடொலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து
கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவர கரியத்
தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக

நிலம்புதைப்