பச் சோறட்டு மேவரவென இயையும். செருவெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோவெனக் கூட்டுக. பெருந்தோளென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. வெப்புளென வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது; வெம்மையை உள்ளும் முதிர்ந்தவெனினும் அமையும்.
(121) ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈத லெளிதே மாவண் டோன்றல்
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.
திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி. (பொதுவியல்) மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது. (இ-ள்.) ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்; அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக- எ - று.
(122) கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் றுப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென விலைநீ பெருமிதத் தையே.
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ-ள்.) கடலாற் கொள்ளப்படாது, அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற்கொள்ளார், வீரக்கழலணிந்த இலக்கணத்தாற்றிருந்திய நல்ல அடியையுடைய காரி! நினது நாடு; அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; கெடாத செல்வத்தினையும் வென்றிபொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாகவேண்டுமென்று அம்மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும்பொருள், நுமது குடியை வாழ்த்தினராய்வரும் பரிசிலருடையது; ஆதலால் வடதிசைக்கட்டோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய அரிவையுடைய தோள்மாத்திரை யல்லது நின்னுடையதென்று சொல்ல
|