புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   415
Zoom In NormalZoom Out


னாயினாய்,   பெரும!  பெரிய  மழைக்கு  இருப்பிடமாதற்கு அமைந்த
உயர்ந்த மலையையுடைய  திருத்தக்க   சேயையொப்பாய்!   நின்னை  நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு-எ - று.

பனுவலன்ன நிணமென இயையும்.

நிலங்கவர்பென்பது  கவரவெனத்  திரிக்கப்பட்டது.  எமது  நிலத்தைக்
கைக்கொண்டெனினும் அமையும்.

தாளாற்றலாற்    செய்தபொருளில்    நல்லனவெல்லாம்   பரிசிலர்க்கு
வழங்கி எஞ்சியது உண்டலான், அழிதின்றாங்கென்றார்.

காண்குவந்தென்பன    ஒருசொன்னீர்மைப்பட்டு   உண்குமென்பதற்கு
முடிபாய் நின்றன.

உண்குமென்பது   சுற்றத்தை   உளப்படுத்தி  நின்றமையின்,  பன்மை
யொருமை வழுவமைதியாய் நின்றது.

மன் : கழிவின்கண் வந்தது.

பெரும!   சேஎய்!  வென்றோனும், வெலீஇயோன் இவனென நிற்கூறும்;
தோற்றோனும்,   தொலைஇயோன்   இவனென  நிற்கூறும்;  அதனால்,
நிற்பெற்றிசினோர்க்கு   ஒருநீயாயினையாதலால்,  நின்  மகிழிருக்கைக்
கண்ணே உண்கும் காண்குவந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும்
நறவு நல்ல அமிழ்தாகவென மாறிக்கூட்டுக.

நெருப்புச்   சினந்தணிந்த   நிணந்தயங்கு   கொழுங்குறை என்பதற்கு
எரியாது  பூத்துக்கிடக்கின்ற  தழல்போலும் நிணந்தயங்கு கொழுங்குறை
யெனினும் அமையும்.

பருஉக்கண்மண்டை  யென்பதற்குக்  கண்ணையுடைய  உடலிடம் பரிய
மண்டையெனினும் அமையும்.

(126) ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ

வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்

ஓடாப் பூட்கை யுரவோன் மருக

வல்லே மல்லே மாயினும் வல்லே

நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல்

துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற்

பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந

தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய

நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்

புலனழுக் கற்ற வந்த ணாளன்

இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்

பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு

சினமிகு தானை வானவன் குடகடற்

பொலந்தரு நாவா யோட்டிய வவ்