புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   418
Zoom In NormalZoom Out


(133) மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பி னல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்மே.
 

திணை - அது; துறை - விறலியாற்றுப்படை. (பாடாண்டிணை) 

அவனை அவர் பாடியது. 

(இ-ள்.)  மெல்லிய   இயல்பினையுடைய   விறலி!  நீ  நல்லபுகழைச்
செவியாற் கேட்பினல்லது அவன்வடிவைக் காண்டலறியாய்; காண்டலை
விரும்பினாயாயின், மாட்சிமைப்பட்ட நினது மணம்வளரும் கூந்தலிலே
வரையிடத்துக்   காற்று  வந்தசைப்பப்  பீலியையுடைய  மயில்போலக்
காட்சி    உண்டாக    நடந்து    மழைபோன்ற  வண்மையையுடைய
தேரினையுடைய வேள் ஆயைக் காணச் செல்வாயாக-எ - று.
 

'விரைவளர்   கூந்தல்   வரைவளி  யுளர'  என்றது,  'கொண்டைமேற்
காற்றடிக்க' என்பதொரு வழக்குப்பற்றி நின்றது,
 

என்றதனாற் பயன் : பிறிதொன்றால் இடையூறில்லையென்பதாம். 

ஆய்   மாரியன்ன   வண்மையனாதலின்,   விறலியை  அம்மாரியைக்
கண்ட மயில்போலக் களித்துச்