பருத்திப் பெண்டின் பனுவ லன்ன நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாளநின் மகிழிருக்கையே உழுத நோன்பக டழிதின் றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே
குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே
வெலீஇயோ னிவனெனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேன் மலைய னல்ல னாயின்
நல்லமர் கடத்த லெளிதும னமக்கெனத்
தோற்றோன் றானு நிற்கூ றும்மே
தொலைஇயோ னிவனென
ஒருநீ யாயினை பெரும பெருமழைக்
கிருக்கை சான்ற வுயர்மலைத்
திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே. திணை - வாகை; துறை - அரசவாகை. சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர் வண்மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது. (இ-ள்.) பருத்திநூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற நெருப்புத் தன்வெம்மை ஆறுதற்கு ஏதுவாகிய நிணமசைந்த கொழுவிய தடிகளைப் பெரிய உடலிடத்தையுடைய கள்வார்த்த மண்டையோடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட உண்பேமாக, எம்முடைய தலைவ! நின்னைக் காண்பேன் வந்தேன், பகைவரது வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்! நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைக்கண்; உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற்போல நினது தாளாற்றலாற்செய்த பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பியுண்ணும் கள் நல்ல அமிழ்தாவதாக; மலைபோலும் யானை பட எதிர்நின்று கொன்று வென்றவனும், நம்மை வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்; வீரக்கழலாகிய அணியாற்சிறந்த செய்ய அடியாலே போர்க்களத்தைக் கைக்கொள்ளவேண்டி விரைந்து வந்து போரைத் தடுக்க வலிய வேலினையுடைய மலையன் அல்லனாயின் நல்ல போரைவெல்லுதல் நமக்கு எளிதெனத் தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென நின்னையே புகழ்ந்துசொல்லும்; ஆதலால், நீ ஒருவ
|