வழிப்
பிறகலஞ் செல்கலா தனையே மத்தை
இன்மை துரப்ப விசைதர வந்துநின்
வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற்
றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப
அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய
அருஞ்சமந் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. (இ-ள்.) பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக் கொண்டு பாணரது தலை பொலியும்படி செய்து வாடாத பொற்றாமரையைச் சூட்டிய சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையும் உடைய பெரியோன்மரபினுள்ளாய்! ஒன்றைக் கற்றறிவேமாயினும் அறியேமாயினும் விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின், இராப்பொழுதுதான் ஓரிடத்தே உறங்குவதுபோன்ற செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும் பறையொலிபோலும் ஒலிபொருந்திய அருவியையுமுடைய முள்ளூர்க்கு வேந்தே! அழித்தற்கரிய தன்மையையுடைய நின்சுற்றத்துடனே பெருக நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும் அறிவின்கண் மாசற்ற அந்தணாளனாகிய கபிலன் இரந்துசெல்லும் புலவர்க்கு இனிப் புகழ்தற்கு இடனில்லையாகப்பரந்து புகழ்நிற்பப் பாடினான்; அதனைக் கொண்டு சினமிக்க சேனையையுடைய சேரன் மேல்கடலின்கட் பொன்னைத்தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து வேறு சில மரக்கலம் போகமாட்டாத அத்தன்மையையுடையேமாயும் எமது மிடி துரக்க நின்புகழ் கொடுவர வந்து நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம், யாங்கள்; முட்போலும் பல்லினையுடைய பாம்பை எறியும் இடியேறுபோல முரசு கிளர்ந்தொலிப்பத் தலைமையையுடைய யானையுடனே அரசு போர்க்களத்தின்கட்படப் பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டிப் பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும் பெண்ணையாற்றுப்பக்கத்தை யுடைய நாட்டையுடையோய்!-எ - று. உரவோன்மருக! பொருந! நாடுகிழவோய்! நின்வயிற் கிளக்குவமாயின், அந்தணாளன் கிளையொடும் பொலிய இசைநிற்பப் பாடினன்; அதற்கொண்டு பிறகலம் செல்லாத அனையேமாயும், இன்மை துரத்தலால் இசைதர வந்து நின்வண்மையிற் சில தொடுத்தேம்
|